உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


ல்

அத்தோடு தல வரி, தலமேல் வரி எல்லாம் சேர்த்து 39 ரூபாய் என்று இருந்தது; எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தது. பிறகு 1993ஆம் ஆண்டில், கடந்த ஆட்சிக்காலத்தில், செல்வி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 12-3-1993 அன்று உப்பள நிலத்திற்குக் குத்தகைத் தொகையை மாற்றியமைத்து உயர்த்தி, ஆணை வெளியிடப்பட்டது. கடந்த ஆட்சிக் காலத்தில், இந்த ஆணையின்படி, ஏக்கர் ஒன்றுக்கு, ஆண்டு ஒன்றுக்குக் குத்தகை ராயல்டி, தல வரி, தலமேல் வரி எல்லாம் சேர்த்து 445 ரூபாய் என்று ஆனது. இப்போது மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுடைய கோரிக்கை, சட்டமன்ற உறுப்பினர் தூத்துக்குடி பெரியசாமி அவர்களுடைய கோரிக்கை, இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு, உப்பளத் தொழிலாளர்களுடைய நல வாழ்வு, உப்பளத் தொழில் நலிந்துவிடாமல் இருக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையெல்லாம் கருதிப் பார்த்து, 445 ரூபாய் என்று கடந்த ஆட்சிக் காலத்தில் உயர்த்தப்பட்ட குத்தகைத் தொகையைக் குறைத்து, குத்தகை ராயல்டி, தல வரி, தலமேல் வரி எல்லாவற்றையும் சேர்த்து, ஏக்கர் ஒன்றுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 135 ரூபாய் செலுத்தினால் போதும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி). 445 ரூபாய் என்பது 135 ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

மற்றொன்று; பனை வெல்லத்திற்கு இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் விற்பனைக் குழுக்களில் சந்தைக்கட்டணம் வசூலிப்பதைக் கைவிடவேண்டுமென்ற அந்தப் பகுதி மக்களுடைய கோரிக்கையை ஏற்று பனை வெல்லத்திற்கு சந்தைக்கட்டணம் வசூலிப்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

(மேசையைத் தட்டும் ஒலி).

ம்

மாண்புமிகு உறுப்பினர் திரு. சொக்கர் மற்றும் கோவை பயிர்ப் பாதுகாப்பு விசைத் தெளிப்பான் மற்றும் உதிரிப் பாகங்கள் தயாரிப்பாளர்கள் அமைப்பு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்கூடச் சொன்னார்கள்; இவர்களின் கோரிக்கையை ஏற்று விவசாய விசைத் தெளிப்பான்கள் - Agricultural Power Sprayers மீது விதிக்கப்படும் விற்பனை வரி 11 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாகக் குறைக்கப் 4 படுகிறது.