உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


பல முன்னாள் எம்.எல்.ஏ.க்களைப் பார்க்கின்றேன். பஞ்சக் கோலமாக, பராரியாக, அழுக்குச் சட்டையோடு, கிழிந்த வேட்டியோடு பல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களைப் பார்த்தேன். தி.மு.க. உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, வேறு கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, அப்படிப்பட்ட கோலத்தில் பலரைப் பார்க்கின்றேன். அப்படிப் பார்த்த காரணத்தினாலேதான் 5 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்த வேண்டும் என்று, முடிவுக்கு வந்தோம்.

5

இன்னொன்று, ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்.எல்.ஏ. இறந்துவிட்ட பிறகு, அவர் பெற்று வந்த ஓய்வூதியத் தொகையில் 50 சதவீதம் மனைவிக்கு அல்லது வாரிசுதாரர் களுக்கு அரசு வழங்கும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல, என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).

ப்

மற்றொன்று; இறுதியாக இரண்டு, மூன்று முறை இந்த அவையிலே சொல்லப்பட்டது; பத்திரிகையிலே எல்லாம் ஒரு தவறான தலைப்பைப் போடுகிறார்கள். என்னுடைய அறிக்கையையும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். 'POTA' சட்டத்தைத் தி.மு.க. ஆட்சி வாபஸ் பெற்றுவிட்டது என்று போடுகிறார்கள். இப்படிச் சொல்வதால் சுப்பராயன் அதிர்ச்சி அடையத் தேவையில்லை. வாபஸ் பெறவில்லை. சட்டத்தை அறிமுகப்படுத்தினோம், அதை நடைமுறைப்படுத்தினால் அல்லவா வாபஸ் பெறுவது- நடைமுறைப்படுத்தவே இல்லை. சட்டத்தை இங்கே பெரும்பான்மையான உறுப்பினர்களுடைய ஆதரவோடு நாம் நிறைவேற்றினோம். அதை மத்திய அரசுக்கு அனுப்பினோம். மத்திய அரசு, குடியரசுத் தலைவருக்கு அதை அனுப்புவதற்கு முன்பாகவே, சில விளக்கங்களை நம்மிடத்திலே கேட்டிருந்தது. அதற்கிடையே பல தலைவர்கள் என்னைச் சந்தித்தார்கள். இஸ்லாமிய சமுதாயத் தலைவர்களும், சிறுபான்மை சமுதாயத் தலைவர்களும், கிருத்துவ சமுதாயத் தலைவர்களும், அஃதன்னியில் இஸ்லாமியர் அல்லாத, கிருத்துவர் அல்லாத பல்வேறு கட்சித் தலைவர்கள் என்னைச் சந்தித்து இதைப்பற்றி என்னிடத்திலே பேசினார்கள். கொஞ்சம்