494
மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது
தாழ்த்தப்பட்டோர் நல மானியம்
உரை : 60
நாள் : 16.05.2000
ப
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்அவர்களே, தாழ்த்தப்பட்ட பின்தங்கிய மக்களின் கையைப் பிடித்துத் தூக்க வேண்டும், அதற்காக முன்னேறிய சமுதாயத்தின் காலைப் பிடித்து இழுக்கக் கூடாது என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் பின்பற்றுகின்ற சமூக நீதிக் கொள்கையாகும். (மேசையைத் தட்டும் ஒலி) இந்தக் கொள்கை இன்று நேற்று அல்ல, நீண்ட நெடுங்காலமாக நான் தலைமை ஏற்றிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எடுத்துச்சொல்லி வந்திருக்கின்றேன். 1928-ஆம் ஆண்டு தமிழகத்திலே ஓர் ஒளி ரி தோன்றியது. இருட்டைக் கிழித்துக்கொண்டு வெளி வந்த ஒளி ரி அந்த ஒளி. அந்த ஒளிக்குப் பெயர்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் Communal G.O. என்பதாகும்.
6
அந்த ஒளியைப் பிரகாசிக்கச் செய்தவர் முத்தையா முதலியார். அன்றையதினம் நீதிக்கட்சியினுடைய அமைச்ச ரவையில் சுப்பராயன் அவர்கள் இருந்தபோது இந்தச் சட்டத்தை இயற்றி, அப்படி இயற்றப்பட்ட காரணத்திற்காக தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்தில் மந்திரி முத்தையா முதலியார் வாழ்க, வாழ்க, வாழ்க என்று மூன்று முறை எழுதி தலையங்கத்தைத் தீட்டினார்கள். அன்றைக்கு முன்னேறிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் முத்தையா முதலியார் அவர்கள். இருந்தாலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட அந்தக் காலத்திலே Non-Brahmins என்று அழைக்கப்பட்ட மக்களுடைய எழுச்சிக் குரல் ஒலித்தபோது அந்தக் குரலுக்கு மேலும் ஆக்கமும், ஊக்கமும் சேர்க்கின்ற வகையிலும் குறிப்பிட்ட சில சமுதாயங்கள் தான் முன்னேற வேண்டும், மற்ற சமுதாயங்கள் எல்லாம்