உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


வேதனை தொனிக்க, தமது தலைவர்களைச் சோகத்தோடு பார்க்கிறது இந்தச் சமுதாயம். சமூக நீதி சென்னை நீதிமன்றத்திலே, சட்டப் பிரச்சினை மூலம் சாய்க்கப்பட்டது. நாம் எல்லாம் குமுறினோம்; நாடெங்கும் மக்கள் கண்டனத்தைத் திரட்டிக் காட்டினோம். சமநீதி வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்து என்ற முழக்கங்களோடு” என்று அன்று அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த வழி வந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 1969ஆம் ஆண்டு முதன் முதலாக சட்டநாதன் தலைமையிலே பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு ஒன்றை அமைத்தோம்.

1954ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கு 16 சதவிகிதம் என்றும், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவிகிதம் என்றும், பொதுப் போட்டியினருக்கு 59 சதவிகிதம் என்றும் இருந்ததை, 1971ஆம் ஆண்டுவரை யாரும் மாற்றவில்லை; உயர்த்தவும் இல்லை.

5.-

ம்

1971-ல் கழக அரசுதான் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிமக்களுக்கு 18 சதவிகிதம் என்றும், பிற்படுத்தப் பட்டோருக்கு 31 சதவிகிதம் என்றும், பொதுப் போட்டியினருக்கு 51 சதகிவிதம் என்றும் உயர்த்தியது. மிகப் பிற்படுத்தப் பட்டோருக்குத் தனி ஒதுக்கீடு வேண்டும் என்று பல ஆண்டுகளாக இருந்த கோரிக்கையை ஏற்று, மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதம் என்றும், பிற்படுத்தப் பட்டோருக்கு 30 சதவிகிதம் என்றும் இட ஒதுக்கீடு செய்தது ம் 1989-ல் திராவிட முன்னேற்றக் கழக அரசிலேதான். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 சதவிகிதம் என்று இருந்த ஒதுக்கீட்டை ஆதிதிராவிடருக்கு மாத்திரம் 18 சதவிகிதம் என்றும் பழங்குடியினருக்குத் தனியாக ஒரு சதவிகிதம் என்றும் ஆக்கியதும் 1990-ல் தி.மு.க அரசிலேதான். பிற்படுத்தப் பட்டோருக்கு எனத் தனி இயக்ககம் ஒன்று உருவாக்கப்பட்டதும் 1969-ல் தி.மு.க. ஆட்சியிலேதான். பிற்படுத்தப்பட்டோர் நலனைக் கவனிக்க அதற்கென்று தனியாக தனி அமைச்சர் நியமிக்கப்பட்டதும் தி.மு.க. ஆட்சியிலேதான். மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு எனத் தனி இயக்கம் தோற்று விக்கப்பட்டதும் 1989-ல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான். பழங்குடியினர் நல இயக்ககம் அறிவிக்கப் பட்டதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான். 31-3-2000 அன்றுதான் இதற்கான அரசாணை வெளியிடப்

6