510
மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது
திட்டத்திற்காக நிர்ணயம் செய்து, பிறகு surrender செய்வது ஒரு முறை. ஆனால், இப்படி Surrender செய்யாமல், நிர்ணயிக்கப் பட்ட திட்ட ஒதுக்கீட்டுக்கும் அதிகமாக செலவு செய்துள்ள ஒருசில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதை (மேசையைத் தட்டும் ஒலி) நான் பெருமையோடு கூறிக் கொள்கிறேன்.
நிதிநிலை அறிக்கையை வழங்கியபோது 2000-2001 ஆம் ஆண்டிற்கு 665 கோடி ரூபாய் இறுதிப் பற்றாக்குறையாக இருக்குமென்று அறிவித்தேன். அதன்பிறகு அந்தப் பற்றாக்குறையை மேலும் பெருக்குகின்ற அளவிற்குப் பல்வேறு அறிவிப்புகள், நேற்றையதினம், செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை விரிவாக்கியது ஆகிய இவையெல்லாம் உட்பட மேலும் அதிகமாக 200 கோடி ரூபாய் செலவு வந்திருக்கிறது. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் கை மாத்திரம் தட்டுகிறோம் என்று கையைத்தட்டிவிட்டு, நேற்றைக்கு எங்களைச் சிக்க வைத்திருக்கிறீர்கள். ஆக, 665 plus 200 கோடி, இரண்டையும் சேர்த்தால், ஆக மொத்தம் 865 கோடி ரூபாய் பற்றாக்குறை அதிலே மாத்திரம் 200 கோடி ரூபாய் அல்ல- ஒவ்வொரு மானியத்திலும் அமைச்சர்கள் மாண்புமிகு உறுப்பினர்களுடைய வேண்டுகோள், முறையீடு, அவர்களுடைய கருத்துகளுக்கேற்ப வெளியிட்ட அந்த அறிவிப்புக்களை எல்லாம் சேர்த்துத்தான் சொல்கிறேன் - மேலும் 200 கோடி ரூபாய் பற்றாக்குறை ஆகமொத்தம் 865 கோடி ரூபாய் பற்றாக்குறையாக வருகிறது. இந்தப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட நான் நிதிநிலை அறிக்கையிலேயே சில வழி முறைகளைச் சொன்னேன்.
அ
மத்திய அரசாங்கம் மொத்த வரி வருவாயில் 29 சதவீதத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது தொடர்பான அரசமைப்புச் சட்டத்திருத்தம், வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. அத்திருத்தம் கொண்டு வரப்பட்ட பிறகு, அதன் காரணமாகவும் தமிழக அரசுக்குக் கூடுதல்நிதி வர வாய்ப்புள்ளது என்று பேசியிருக்கிறேன். அது நம்முடைய பற்றாக்குறையைச் சரிக்கட்ட ஓரளவிற்குப் பயன்படும்