உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


மன்றத்தினுடைய முன்னாள் நீதியரசர் மற்றும் ஓய்வு பெற்ற திரு. சீதாராமதாஸ் I.A.S. மற்றும் திரு. ஏ. வெங்கட்ராமன் ஆகியோர்களைக்கொண்ட ஒரு குழு அமைத்து தமிழகத்திலே தென் மாவட்டங்களிலே தொழில் துறையை வளர்ப்பதற்கு, வேலைவாய்ப்புகளை ஈட்டுவதற்கு என்ன காரியங்களைச் செய்யலாம் என்ற திட்டத்தைத் தயாரித்துக்கொடுங்கள் என்று கேட்டதற்கிணங்க அவர்கள் கொடுத்த திட்டங்கள் அரசுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பற்றாக்குறையை மாத்திரம் அல்லாமல், தென் மாவட்டங்களிலே உள்ள மக்களுடைய நல்வாழ்வுக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும் அந்தத் தொகை பயன்படுத்தப்படும். அதற்கு இன்னும்கூட கொஞ்சம் தொகை மத்திய அரசாங்கத்திட ய மிருந்து பெறப்படும் என்ற நற்செய்தியை நான் இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

அந்தப்

இங்கே பேசிய உறுப்பினர்கள் யாவரும் ஒன்றைச் சுட்டிக் காட்டுவார்கள் என்று கருதினேன். ஒருவேளை நான் வெளியிலே சென்றிருக்கும்போது சொன்னார்களோ என்னவோ தெரியாது. பால் உற்பத்தியாளர்களுடைய சங்கடத்தைப்பற்றி யாரும் பேசவில்லை. ஏனென்றால் இந்தப் பிரச்சினையைப் பொறுத்த வரையில், நிதி ஒதுக்கீடு மசோதாவைப் பொறுத்தவரையில் எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கிறோம், பொருளாதாரத் தத்துவங்களை, பொருளாதாரக் கோட்பாடுகளை அரசினுடைய வருவாய் செலவு இவற்றைப்பற்றிப் பேசுவதோடு அல்லாமல் இது ஒரு பலசரக்கு மசோதாவாகவே எல்லா வற்றையும் பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். அப்படி கருதிக்கொண்டிருக்கும் போது நிச்சயமாக இதிலே பாலும் வரும் என்று நான் எண்ணினேன். இல்லாவிட்டாலும்கூட சொல்லவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

பால்

உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு உண்டான தொகையை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்று பலரும் புகார் கூறி