உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


தமிழகத்திலே மானாவாரி நிலமாக உள்ள பரப்பில் அரிய மூலிகைகளை உற்பத்திசெய்ய வழிவகுத்தால் வருமானமும் அதிகரிக்கும், மூலிகைகளின் பயன்பாடும் பெருகும். அதற்கு ஏற்பாடுகளாக, அதிக அளவில் மூலிகைகள் உள்ள பகுதிகளான கொல்லிமலை, குற்றாலம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி போன்றவை மருத்துவ குணமுள்ள செடிகளைப் பேணும் பகுதிகளாக (Medicinal Plants Conservation Areas) அறிவிக்கப்படும்.

சிதைந்த வனப்பகுதிகளைக் கண்டறிந்து அங்குத் தீவிர மூலிகை சாகுபடி செய்து தரமான மூலிகைப் பொருட்களைச் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவ குணமுள்ள செடிகள் மிகுந்துள்ள வனப் பகுதிகள் கண்டறியப்பட்டு அவற்றின் உபயோகத்திற்கான மேலாண்மைத்திட்டம் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு வன வளர்ப்புத் திட்டம் உள்ள இடங்களில் மூலிகைச் செடிகளை கிராம மக்களுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பது மற்றும் பயிரிடுவது ஆகிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மருத்துவ குணமுள்ள செடிகள் இருக்குமிடம் மற்றும் அவைபற்றிய விழிப்புணர்வூட்டும் திட்டம் அரசு சாரா அமைப்புகள் மூலமாகத் தொடர் நது செயல்படுத்த

நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தோட்டக்கலைத்துறை, பழங்குடியினர் நலத்துறை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் வனத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அபூர்வ மூலிகைகளைச் சிறப்பாகப் பராமரிக்கவும், பேணவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இத்திட்ட செயல்பாடு முதலமைச்சர் செயலகம் மூலம் ஆரம்பக்கட்டத்திலிருந்தே தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).