உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


வேண்டுகோள்களை நன்கு ஆய்வு செய்தபின்னர், பின்வரும் வரி மாற்றங்களை மற்றும் வரிவிதிப்பு நடைமுறைகளில் உள்ள மாற்றங்களை அறிவிக்கின்றேன்.

பருத்தி கழிவு (cotton waste) மீதான விற்பனை வரி 8 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது. (மேசையைத் தட்டும் ஒலி).

P.V.C. குழாய் மற்றும் பொருத்திகள் மீதான விற்பனை வரி 12 விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காடாகக் குறைக்கப் படுகிறது. (மேசையைத் தட்டும் ஒலி).

மேற்கண்ட பொருட்களின் வரி விகிதங்கள் அண்டை மாநிலங்களைவிட அதிகமாக இருப்பதால் வணிகம் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதைத் தடுக்கும்பொருட்டு இந்த வரிக் குறைப்பு செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் வருவாய் மாற்றங்கள் ஆறு மாத காலத்திற்குப்பின் ஆய்வு செய்யப்படும். மேற்கண்ட பொருட்களில் வரி இழப்பு ஏற்படுமானால் இவற்றில் தக்க மாற்றம் செய்யப்படும்.

அடுத்து மிதி வண்டி இருக்கை உறைகள் (Cycle seat covers) மீதான வரி 4 விழுக்காட்டிலிருந்து 1 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது. (மேசையைத் தட்டும் ஒலி).

4

பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான விற்பனை வரி 8 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது. (மேசையைத் தட்டும் ஒலி).

வணிகச்சின்னத்துடன் உள்ள பால்கோவா மீதான விற்பனை வரி 16 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது து.

பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கண்ணாடி சீசாக்கள் மீதான கொள்முதல் வரி 12 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது (மேசையைத் தட்டும் ஒலி)

முகம் பார்க்கும் கண்ணாடிகள், பிரதிபலிக்கும் வண்ணக் கண்ணாடிகள், பிரதிபலிக்கும் உருவக்கண்ணாடிகள் மீதான விற்பனை வரி 16 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது.