520
மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது
Chambers of Commerce and Industry நடத்தியுள்ள ஆய்வு வெளிப்படுத்துகிறது.
மேலும், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தித் திறனில் அரியானா மாநிலம் இதுவரை முதலாவது இடத்தில் இருந்து வந்துள்ளது. ஆனால், அந்த முதல் நிலை தற்போது அரியானா விடமிருந்து நழுவிவிட்டது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தித் திறனில் அரியானா, ஒரிசா ஆகிய இரண்டு மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தமிழ்நாடு முதல் இடத்திற்கு வந்துவிட்டது. (மேசையைத் தட்டும் ஒலி).
1998-1999 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு என்று மூன்று தனிச்சிறப்புகள் சேர்ந்துள்ளன. இந்தியாவிலே தமிழ்நாடு அரிசி உற்பத்தித்திறனில் முதல் இடம்; கரும்பு உற்பத்தித் திறனில் முதல் இடம்; எண்ணெய் வித்துக்கள் உற்பத்தித் திறனில் முதல் இடம் பெற்றுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியோடு என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். இந்தச் சட்டமுன்வடிவை ஏற்று, ஒப்புதல் அளித்து, நிறைவேற்றித் தருமாறு கேட்டு அமைகின்றேன். வணக்கம். (மேசையைத் தட்டும் ஒலி).