உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

525


பிறகு 15, 20 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணியாற்றினாலும், பதக்கம் பெற தங்களது பதவிக்காலம் முழுவதும் தண்டனை ஏதும் பெற்றிருக்கக்கூடாது என்ற விதியுள்ளதால் பதக்கம் பெற முடியாத நிலையிலே உள்ளார்கள். எனவே கடந்த 10 ஆண்டுகளில், எந்தவித தண்டனையும் இல்லாதவர்களுக்கு முதலமைச்சரின் காவல் துறை அண்ணா பதக்கம் வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கீழ்பவானி பாசனத்திட்டத்திற்கு பயிர் கட்டுப்பாட்டின் காரணமாக, விதிக்கப்பட்டுவரும் தண்டத்தீர்வைக்குப் பதிலாக ஏக்கர் வாரியாக தீர்வை நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

ல்

ம்

கீழ்பவானி பாசனத் திட்டத்தில் பருவ கால சுழற்சி முறை நீர்பாசனத் திட்டம் (Seasonal Sluice Turn System) அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று வரையிலே அது நடை முறையிலே இருந்துவருகிறது. இந்த சுழற்சிமுறை திட்டத்தின்படி ஆகஸ்ட் 15 ஆம் நாளிலிருந்து டிசம்பர் 15 ஆம் நாள் வரை முதல் போகம் என்றும், டிசம்பர் 15 ஆம் நாளிலிருந்து மார்ச் 15 ஆம் நாள் வரை இரண்டாம் போகம் என்றும் பிரிக்கப்பட்டு, முதல் போகத்திற்கு 4 மாதங்களுக்கு மொத்தம் 24 டி.எம்.சி. தண்ணீரும் இரண்டாம் போகத்திற்கு 3 மாதங்களுக்கு 15 டி.எம்.சி. தண்ணீரும் வழங்கப்படுகிறது. இந்த சுழற்சி முறை திட்டத்தின் மூலம் 75,000 ஏக்கர் ஆயக்கட்டு ஜனங்கள் பாசன வசதி பெறுகின்றனர். இரண்டாம் போகத்தில், அதாவது டிசம்பர் 15-லிருந்து மார்ச் 15 வரை தடை செய்யப்பட்டுள்ள நஞ்சைப் பயிர்களை பயிரிட்டால் தண்டத் தீர்வையாக முதன்முறை 5 மடங்கு சாதாரண தண்ணீர்த் தீர்வை என்று தொடங்கி நான்காவது முறை மற்றும் அதற்குப் பிறகு 20 மடங்கு சாதாரண தண்ணீர்த் தீர்வை என்று தண்டத் தீர்வை வசூல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுவரும் பிரச்சினைகளை முழுமையாக ஆய்வு செய்து, தீர்வு காண்பதற்கு என்று சிறப்பு ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் குழு ஒன்றை இந்த அரசு அமைத்தது. அந்தக் குழு அளித்துள்ள பரிந்துரைகளை பரிசீலனை செய்து கீழ்பவானி பாசன, ஆயக்கட்டு நிலங்களுக்குத் தண்ணீர்த் தீர்வை விதிப்பதற்கு பயிர் வகையை அடிப்படையாகக் கொள்ளாமல், இனி நிலத்தின் பரப்பளவு அதாவது ஏக்கர்

ம்

5