பக்கம்:மானுடம் வென்றது (கட்டுரைகள்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை அன்பர்கள் அவ்வப்போது கேட்டுக்கொண்ட வகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந் நூல். பல துறைகளில் பல காலங்களில் பல இதழ் களில் இவை இடம் பெற்றமையின் பொருள் தொடர்பு இருக்கக் காரணமில்லை. எனினும் அவற்றை நான்கு வகைத் தலைப்புக்களில் பாகு படுத்தியுள்ளேன். பதி ைன் கு கட்டுரைகளும் காப்பியம், உலகியல், சமயம், மொழிஇயல் என்ற நான்கு பிரிவுகளில் அடங்குகின்றன. இக்கட்டுரை களுள் முதலாவதாக உள்ள 'மானுடம் வென்றது’ என்றதன் பெயராலேயே இந்நூல் வெளிவரு கின்றது. இதைத் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத் தார் தம் தமிழ் உறவு வரிசையில் வெளியிட விரும்பினர்கள். அவர்களுக்கு என் நன்றி தமிழ்க்கலை இல்லம் பணிவுள்ள, சென்னை-30. 12-10-65 அ. மு. பரமசிவானந்தம்