பக்கம்:மாபாரதம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

113

அங்கலாய்ப்பு மொழிகளைக் கேட்பது வழக்கம்; அதற்குத் துரியன் விலக்காக அமையவில்லை; மகிழ்வதற்கு மாறாக இகழ்வதில் தலைப்பட்டான்.

தருமனின் தம்பிமார்கள் நால்வரும் தறுதலைகளாக மாறிவிடுவார்கள் என்று தவறுதலாகக் கணக்குப் போட் டவன் துரியன்; அவர்கள் நால்வரும் நல்ல நிலைக்கு வந்து விட்டதால் அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்வீட்டுக் குடிசையில் வாழ்ந்துவந்த குப்பன் குபேரனாக ஆவதை உழைக்காது உப்பரிகையில் இருந்த சுப்பன் தாங்க முடியாமல் உளறிக்கொட்டினான்; தருமன் இப்படி உயர்வான் என்று எதிர்பார்க்கவில்லை. “என் கனவிட அவன் ஒரு சாண் வளர்ந்தாலும் நான் அவனுக்குத் தாழ்ந்துதானே போக வேண்டியுள்ளது? வீடு கட்டியவன் நம்மை ஏன் அழைக்க வேண்டும்? பளிங்குக் சல்லில் கால்வைத்து இடறியபோது அந்தப்பாவை ஏன் நகைக்க வேண்டும்? என் கையாலேயே அவன் ஈட்டிய பொருளை ஏட்டில் என்னைக் கொண்டு எழுதச் செய்தது ஏன்? தான் ஒரு சீமான் என்று எடுத்துக் காட்டுவதற்காகத்தான். அங்கர் கோமான் கன்னனைக் கொண்டு அணியையும், மணியையும் வாரிக் கொடுக்கச் சொன்னான்; அவன் எட்டு அடுக்கு மாடி கட்டினால் அதில் அவன் கட்டிப் புரள்வது தானே! திட்டமிட்டுச் சேர்த்து வைத்த பொருளைக் காக்கச் சொல்லி என் கண்களைப் பூக்கச் செய்தானே! நான் என்ன பொருள் காக்கும் பூதமா? அல்லது அவன் அடித்த கொள்ளைப் பணத்தின் பூஜ்யங்களைக் சண்டு நான் திகைப்பு அடைந்து போக வேண்டும் என்ற பிடிவாதமா? பெரியோர் சொத்தைப் பேணிக் காக்காமல் எட்டுத்திக்கும் திரிய வைத்து ஊர் சொத்து களை இவன் உலையில் போடுவது எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? பாரத தேசத்தில் இவன் முரசுக்

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/116&oldid=1036586" இலிருந்து மீள்விக்கப்பட்டது