பக்கம்:மாபாரதம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மா பாரதம்

1. குரு குல மரபினர்

மன்னர்கள் மற்றவர்களைப் போல் உதிரிப் பூக்கள் அல்லர். அவர்கள் வரலாறு படைத்தவர்கள், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி எனத் தமிழ் மறவர் பற்றிப் பேசுவது உண்டு. அது போல மா மன்னர்கள் சூரிய வம்சம் என்றும், சந்திர வம்சம் என்றும் கூறப்படுகின்றனர்.

சந்திரனே இக்குலத்தில் தோன்றிய முதல் அரசன் என்று கதை தொடங்குகிறது. அவனுக்குப் பின்னர்ப் பெயரும் புகழும் படைத்த பெரு நில மன்னர்கள் வரலாறு சில அறியக் கிடைக்கின்றன.

இவர்கள் குலம் குருகுலம் என்று அழைக்கப்படுகிறது. குரு என்பவன் கல்வி கேள்விகளில் வல்லவனாக இருந்தான். மனுவைப் போல நீதி நூல்களை வகுத்துக் கொடுத்தவன். ஆசான் என்று அவனைப் பற்றிப்பேசினர். அவன் மரபில் வந்தவர்கள்தாம் பாரதக் கதைக்குரிய பாண்டவர்களும் கவுரவர்களும் ஆவர். பாண்டுவின் மைந்தன் பாண்டவர்கள் எனப்பட்டனர். திருதராட்டிரனுக்குக் கவுரவன் என்ற பெயரும் இருந்தது. அதனால் அவன் மைந்தர்கள் கவுரவர் எனப்பட்டனர்.

புரூரவசு என்பவன் மிகப் பழமையானவன்; அரம்பை ஒருத்தியைக் காதல் கொண்டு அவளை மணந்து ஒரு மகனைப் பெற்றான். இவன் அழகில் மன்மதனையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/12&oldid=1239388" இலிருந்து மீள்விக்கப்பட்டது