பக்கம்:மாபாரதம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

143


“நான் என்ன செய்ய வேண்டும்?”

“என் தம்பி செய்யும் பாரதப்போரில் தேர்க்கொடியில் நீ பறக்க வேண்டும்” என்றான். “அதுதானே! மறுபடியும் எனக்குப் போர்க்களம் காண ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது” என்று சொல்லி அதற்கு இசைந்தான்.

“குபேரன் இருக்கும் நாட்டுக்கு எப்படிப் போக வேண்டு?” என்று கேட்டான்.

அவன் காட்டிய வழியில் விரைவில் சென்று அந்தத் தாமரைக் குளத்தை அடைந்தான். பொன்னால் ஆகிய தாமரைப்பூ ஆதலால் காவல் அதிகம் இருத்தது. அக்காவலனை ஒரு தட்டு தட்டி அனுப்பினான். அவன் ஒடோடிச் சென்று குபேரனிடம் முறையிட்டான்.

“உன்னை எதற்காகக் காவல் வைத்தது? பெரியவர்கள் வந்தால் கண்டும் காணாமல் இருக்கவேண்டும்; அது தான் புத்திசாலித்தனம்” என்றான்.

“யாருடா அங்கே”! அவன் மகனை அழைத்தான்.

“வீமன் வந்திருக்காரு; அவரிடம் வம்பு தும்பு வச்சிக்காதே; கேட்டதைக் கொடுத்தனுப்பு” என்றான். தண்ட லுக்கு வருகிறவர்க்குத் தக்கபடி கொடுத்துப் பழகியவன். அது தொழில் பழக்கம். பூவோடு கொடியைப் பிடுங்கித் தந்தான்.

வீமன் பூ கொண்டு வந்து கொடுத்தான். அவள் அதைத் தன் கூந்தலில் செருகிக் கொண்டாள்.

அவள் முன்னிலும் அழகாக மின்னினாள். ‘பூவையர்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/146&oldid=1048201" இலிருந்து மீள்விக்கப்பட்டது