பக்கம்:மாபாரதம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

மாபாரதம்


தருமன் வீமனைச் சமாதானப்படுத்திக் “குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை; மண்ணுக்காக மாந்தர் போரிடு வது கண்ணைவிற்றுச் சித்திரம் பெறுவது போலாகும்; நாம் வாழ வேண்டும்; பிறரையும் வாழ விடவேண்டும். அது தான் நல்லது” என்று தருமன் சாந்தப்படுத்தினான்.

“நம் கண்ணை நாமே குத்திக் கொள்ள முடியுமா? அவன் நெருங்கிய உறவினன்; அவனை வெறுப்பது அறிவுடைமையாகாது; வற்புறுத்திப் பெறுவது கீழ்த் தரமான செயல் ஆகும்” என்றான்.

வீமன் அதற்குமேல் வாதிட விரும்பவில்லை. தன் முடிந்த கருத்தைக் கூறினான். இதற்கு நம் தெய்வத்திரு மகன் கண்ணன் பாதம் சிவக்க அங்குச் செல்லவேண்டாம். என்னை அனுப்பிவையுங்கள். பாஞ்சாலி விரித்த கூந்தலை முடித்துத்தருகிறேன்; என் வஞ்சினத்தையும்படித்து உரைக் கிறேன்; அதற்கு வழி வகுத்து முடித்தும் வைக்கிறேன்” என்றான். “என் கையில் கதையிருக்கிறது அவனை வதைக்க, தம்பியின் கையில் வில் உண்டு அவன் மார்பில் அம்பு செலுத்த, நகுலன் சகாதேவன் தோள்வலி கண்டும் எதற்கு அஞ்ச வேண்டும்?” என்று மீண்டும் கேட்டான்.

“உதிட்டிரன் குடும்பத்தலைவன்; அவன் சொல்வதை உதாசீனம் செய்வது உகந்தது அன்று; முதலில் அடக்கம்; பின் தேவைப்படும்போது உன் செயல்காட்டு” என்று கூறி அவனைக் கண்ணன் அமைதிப்படுத்தி உட்காரவைத்தான்.

அருச்சுனன் அதைவிடக் கடுமையாகப் பாய்ந்தான்.

“மைக்குழலாள் மன்னர் தம் அவையில் அரற்றிய நாளிலும் அடக்கி வைத்தாய். இக்காலமும் எங்களை முடக்கி வைக்கிறாய்; எக்காலம் நாங்கள் எம் பகையை முடித்து வைப்பது” என்று கேட்டான். “மாசு படிந்த கூந்தலாள் ஆசைதீர அவர்களை அழிப்பதை விட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/175&oldid=1041242" இலிருந்து மீள்விக்கப்பட்டது