பக்கம்:மாபாரதம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசி

201


வீமனை நோக்கித் துரியன் விரைகின்றான். எதிரே இருக்கும் பாண்டவர்களை அழிக்க நாள் எத்தனை ஆகும் என்று கேட்டான்.

வீடுமன் கூறியது வியப்பை அளிக்கிறது. எதிரியை மதித்துப் பேசும் ஆண்மை அவனிடம் வெளிப்படுகிறது.

தான் ஒரு பகலில் சர்திக்கும் சாதனையை மற்றவர் கள் செய்து முடிக்க நாட்கள் அதிகம் ஆகும் என்றான்; துரோணனுக்கு மூன்று நாள்; ஐந்து நாள் கன்னனுக்கு: ஒரு நாழிகையில் அசுவத்தாமன் செய்து முடிப்பான்: ஆனால் அதனை அருச்சுனன் ஒரு க்ஷணத்தில் முடித்து விடுவான் என்று கூறினான். அருச்சுனனின் வில்லாற்றலை வியந்து பாராட்டினான்.

அக்கினி தந்த தேரின் மீது அனுமக் கொடியை அருச் சுனன் பறக்கவிட்டான். துரியனின் படை அணியைக் கண்ட அருச்சுனன் இவ்வளவு பேரை அழித்தபிறகு தான் சாதிக்கப்போவது என்ன என்று சிந்திக்கத் தொடங்கினான். வீடுமன் துரோணன் மற்றும் உள்ள உறவினர் தாம் எதிரே நின்றனர். அவன் வில்லை எடுக்க அவன் விரல்கள் வினாக்களை எழுப்பின. வேண்டாம் இந்தப் போர்; நாடும் வேண்டாம்; ஆட்சியும் தேவை இல்லை என்று வெறுத்துப் பேசினான். பொறுத்துச் சிந்திக்கத் துளப மாலை அணிந்த கண்ணன் அவனுக்கு உளம் கொள்ளத்தக்க அறிவுரை கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/204&oldid=1046407" இலிருந்து மீள்விக்கப்பட்டது