பக்கம்:மாபாரதம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

215

என்ன செய்வது! பத்து நாட்கள் அவனுட ன் வீமனும், அபிமன்யுவும் அருச்சுனனும் தொடர்ந்து போர் செய்தார்கள்.

பத்தாம் நாள் அவனுக்கு விடுதலை தரக் கண்ணன் முடிவு செய்துவிட்டான். சிகண்டி களத்தில் புகுந்து அவனை முடிக்கக் காத்து இருந்தாள். அருச்சுனன் விட்ட அம்புகள் இந்த முதியவனைத் தளர்ச்சியுறச் செய்தன. எனினும் தக்க தருணத்தில் சல்லியன் வந்து அருச்சுனன் மீது அம்புகள் சொரிந்தான். அருச்சுனக்குத் துணையாகச் சிகண்டி போரில் ஈடுபட்டாள்; அவள் தனித்தேரில் இருந்து வீடுமனை எதிர்த்தாள். அப்பொழுது துச்சாதனன் இடையில் புகுந்து அவள் தேரையும் கை வில்லையும் முறித்து வீழ்த்தினான். சிகண்டி தேரும் இன்றிப்படையும் இன்றி உயிருக்கு அஞ்சி ஒதுங்கிக் காலில் நடந்து சென்றாள். வீடுமன் விட்ட அம்பு ஒன்று இரண்டு கண்ணன் மேனியில் பட்டு நீல நிறம் சிவப்பு ஏறிற்று.

இதற்குமேல் வீடுமனை விட்டுவைக்க அருச்சுனன் விரும்பவில்லை; சிகண்டியை அழைத்து அவளை அருச்சுனன் தன்தேரின் முன்பகுதியில் உட்காரவைத்துக் கொண்டான். “அஞ்சாதே அம்புகளை வீடுமன் மீது செலுத்து” என்று கூறி உற்சாகப்படுத்தினான். இருவர் அம்புகளும் ஒரு சேரச் சேர்ந்து வீடுமன் மார்பில் தைத்தன. அவற்றை எடுத்துப்பார்த்தான். சிகண்டியின் அம்பு இது, அர்ச்சுன னின் அம்பு இது என்று வேறு பிரித்தான். சிகண்டியின் அம்பு தன்னை ஒன்றும் செய்யாது என்று கூறி அதைப் பொருட்படுத்தவில்லை, அருச்சுனன் அம்பை மட்டும் எடுத்துவைத்து இனி மரணம் உறுதி என்று றுடிவு செய்து கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/218&oldid=1046516" இலிருந்து மீள்விக்கப்பட்டது