பக்கம்:மாயக் கள்ளன்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


27 றியது. நான்கு பக்கங்களிலும் உள்ள காட்சிகளைப் பார்த்துக் கொண்டே அவன் உல்லாசமாகப் படிக்கட்டுகளில் கால் வைத்து எறின்ை. ஆனால், விரைவிலே அவனுக்குக் கண்ப்பு ஏற்பட்டது. கால்கள் வலியெடுத்தன. அவன் சோர்ந்து போனன். அவனோடு கூடவே மறைவாக இதுவரையிலும் வந்துகொண்டிருந்த மாயக்கள்ளன், அந்தச் சமயம் பார்த்து அவன் முன்னல் வந்து நின்ருன். அவனேப்பற்றிச் சிறுவனுக்கு ஒன்றும் தெரியவில்லே. அவனுடைய மாயவைையப்பற்றியும் அவனுக்கு நினேப்பில்லே.

  • மலேயேறுவதற்கு உனக்குக் கால் வலிக்கிறதா ?” என்று மாயக்கள்ளன் கேட்டான். மிகவும் அன்புள்ளவன் போல அவன் பாசாங்கு செய்தான். "ஆமாம்” என்று சிறுவன் தலையை அசைத்தான்.

"நான் உனக்குத் துணையாகக் கூடவே வருகிறேன். நல்ல நல்ல கதைகளும் சொல்லுகிறேன்” என்று மாயக்கள்ளன் சொன்னன். சிறுவனுக்கு அவனுடைய பேச்சு மகிழ்ச்சி அளித்தது. பலவகையான கதைகளைக் கேட்கவும் அவனுக்கு ஆசை உண் டாயிற்று. தயவு செய்து கதை சொல்லு, எனக்குத் துணை பாகவும் வா’ என்று சிறுவன் ஆவலோடு பதில் பேசின்ை.