பக்கம்:மாயக் கள்ளன்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2 என்ற ஆசை மட்டும் இருந்தது. நாளாக நாளாக இந்த ஆசை அதிகமாகிக்கொண்டே வந்தது. அவர்கள் எங்கோ ஒரு மலேயுச்சியிலே இருக்கிருர்கள் என்று மட்டும் அவனுக்கு ஞாபகம். சில பேர் அவனுக்கு அந்த மலேயைப்பற்றியும் சொன்னர்கள். அந்த மயிைன் உச்சிக்குப் போனல் அவர் களைப் பார்க்கலாம் என்று அவனுக்குத் தெரியும். அதல்ை மயிைன்மீது ஏறுவதற்கு அவன் நினேத்தான். ஆத்மரங்கன் ஒரு விசித்திரமான பிறவி என்று சொன் னேனல்லவா? அவனுக்கு ஒர் அற்புதமான சக்தியும் இருந்தது. வெவ்வேறு வகையான உருவம் எடுக்க அவல்ை முடியும். அப்படி உருவம் எடுக்க அவனுக்கு யாரும் உதவி செய்ய வேண்டியதில்லை. அவனுடைய செயலேக்கொண்டே அவன் அப்படி உருவமெடுப்பான். மரம், பறவை, விலங்கு - இப்படி எந்த உருவம் வேண்டுமானலும் அவன் எடுப்பதுண்டு. மலேயுச்சிக்குப் போய்த் தாயையும் தகப்பனேயும் பார்க்க வேண்டுமென்ற ஆசையிருந்தாலும் அதற்காக ஆத்மரங்கன் நன்ருக முயற்சி செய்யமாட்டான். அவன் சோம்பேறி. ஏதாவது கஷ்டம் வந்தால் அந்தச் சமயத்தில் பெற்ருேர்களே நினேத்துக்கொள்ளுவான். அவர்களிடம் போய்விட்டால் தொல்லேயெல்லாம் தீர்ந்துபோகும் என்று எண்ணுவான். கஷ்டம் கொஞ்சம் குறைந்தால் அவனுக்குத் தாய் தந்தையரைப்பற்றிய நினேப்பும் குறைந்துவிடும் : சந்தோஷம் வந்துவிட்டால் தாய் தந்தையரை ஒரேயடியாக மறந்துவிடுவான். ஆல்ை, அவனுக்கு வாழ்க்கையில் அடிக்கடி பலவிதமான தொல்லைகள் ஏற்பட்டன. அந்தத் தொல்லேகளைப் போக்கிக் கொள்ளுவதற்கு மலேயுச்சிக்குப் போக வேண்டுமென்று பல தடவை நினைத்தான். சிரமம் அதிகமில்லாமல் சுலபமான வழியிலே அங்கே போய்ச் சேரமுடியுமா என்று பார்த்தான். மலேயடிவாரத்திற்குப் போய் அங்கு நின்றுகொண்டு யோசனே செய்தான்.