பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரச மாதேவியாரும் குருக்களையே பாாத்துக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்குற்குப் பின் குருக்கள் பேசத் தொடங்கினார்.

"மன்னர்பிரானே, இந்த மந்திரவாதி மிகப் பொல்லாதவன். அவன் ஆற்றல் மிகமிகப் பெரியது. அதனால் தான் முதலில் மந்திரித்த திருநீறு வேலை செய்யவில்லை.

"வடநாட்டிலே உச்சயினிப் பட்டணம் என்று ஒரு பட்டணம் இருக்கிறது. அதற்குப் பக்கத்திலே ஒரு பாலைவனம் இருக்கிறது. அந்தப் பாலைவனத்திலே நெருப்புப் பொறிகள் பறக்கும். அந்த நெருப்புப் பொறிகளைப் பந்தாடி விளையாடிக் கொண்டு பேய்க் கூட்டங்கள் திரியும். அந்தப் பேய்க் கூட்டங்களையெல்லாம் அடக்கி வைத்திருக்கிறான் இந்த மந்திரவாதி. அதனால் இவன்மிக வல்லமையோடிருக்கிறான்.

"பாலைவனத்தின்பக்கத்திலே ஒரு கல்மலையிருக்கிறது. அந்தமலையின் அடிவாரத்தில் ஒரு பெரிய குகையிருக்கிறது. அந்தக் குகையில் தான் உருத்திரகோபன் என்ற இந்த மந்திரவாதி இருக்கிறான்.

22