பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியவர்களின் அன்பான சொற்கள் தாமே இளைஞர்களுக்குப் பலப்பல நேரங்களில் வெற்றிப் பாதையில் செல்லும் துணிச்சலை உண்டாக்கியிருக்கின்றன. மணிவண்ணனின் வெற்றிக்கும் அவையே காரணமாயின என்று தான் கூறவேண்டும்.

மாராயரிடம் விடைபெற்றுக் கொண்டுபுறப்பட்ட மணிவண்ணன் கோட்டை வாயிலை நோக்கி நடந்தான். உச்சயினிப் பட்டணத்தை அடைந்து மந்திரவாதியைப் பற்றித் தகவல் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் அப்போது அவனுடைய திட்டமாக இருந்தது.

கோட்டை வாயிலை அடைந்தபோது அவனை நோக்கி ஒரு காவல் வீரன் வந்தான். அவன் ஒரு பஞ்சகல்யாணிக் குதிரையை நடத்திக் கொண்டு வந்தான்.

"வீர இளைஞனே, நீ ஏறிச் செல்வதற்காக இந்தக் குதிரையைக்க கொடுக்கும்படி மாமன்னர் கட்டளையிட்டிருக்கிறார். இதைப் பெற்றுக் கொண்டு உன் பயணத்தைத் தொடங்கு. உன்

41