பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துடைத்து விட்டான். பிறகு அதைப் புல்மேய விட்டுவிட்டு மீண்டும் மணிமண்டபத்தை நோக்கி நடந்தான்.

மண்டபத்தின் முன்வாயிலில் பச்சைப் படிக்கல்லால் ஆன திண்ணையின் மீது சோகமே உருவாக ஒரு பெண்மணி உட்கார்ந்திருந்தாள். அவள் முகம்தான் துயரத்தின் அடையாளங்களைக் காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அவள் இருந்த இடத்தில் ஓர் ஒளி வட்டம் சுழன்று கொண்டிருந்தது,

மணிவண்ணன் மிகுந்த மரியாதையோடு அவள் அருகில் சென்று நின்றான். 'அம்மா!' என்று அழைத்தான்.

உடனே அந்தப் பெண்மணியின் முகத்தில் தெரிந்த துயரச் சாயல்மறைந்து விட்டது. புன்சிரிப்பும் எக்களிப்பும் நிறைந்த முகத்தோடு அவள், “மகனே! உன்னைத் தான் நான் நெடு நாளாக எதிர்பார்த்துக் கிடந்தேன். கடைசியில் வந்துவிட்டாய்! வா, என் கண்மணியே! வா!” என்று அழைத்தாள். அன்போடு அவன் கையைப் பிடித்து அவள் தடவிக் கொடுத்தாள். அவன் தலையைக் கோதிவிட்டாள்.

43