பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"மகனே, மணிவண்ணா, நீ நினைப்பது போல் நான் ஒரு மந்திரக்காரியல்ல. நான் ஒரு வன தேவதை. இந்தக் கானகம் முழுவதும் என் ஆளுகைக்குட்பட்டது. மாமன்னர் சோம சுந்தர மாராயருடைய குலதேவதையும் நான்தான். அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்ற நான் ஒருத்தி இருக்கிறேன் என்பதையே மறந்து அந்த மந்திரவாதி மாராயருக்குத் துன்பம் செய்யத் தொடங்கிவிட்டான்.

"இளவரசி செந்தாமரையைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு. இருந்தாலும் துணிச்சல் உள்ள ஒர் இளைஞனுடைய துணையில்லாமல் என்னுல் என் கடமையை நிறை வேற்றமுடியாது. இத்தனை நாளாக நான் இன்னும் ஒரு துணிச்சல் உள்ள இளைஞன் அகப்படவில்லையா என்று கவலைப் பட்டுக் கொண்டேயிருந்தேன். இன்று உன்னைக் கண்டவுடன்தான் என் மனம் அமைதி அடைந்தது.

"மகனே, நான் உனக்கு இப்போது மூன்று பொருள்கள் தருகின்றேன். அந்த மூன்றும் மந்திரவாதியைக் கொல்லத் துணை செய்யும்.

"இதோ இந்தச் சேணத்தை உன் குதிரை முதுகில் பூட்டு. அந்தச் சேணம்பூண்ட குதிரை

50