பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

மாயா விநோதப் பரதேசி

அவனுடைய வார்சுதார்கள் பங்கு போட்டுக் கொள்ளுகிறார்கள். அவனுடைய தேகபலம் ஒடுங்குகிற வரையில்தான் பொருள் அவனுடையது என்று கருதப்படுகிறது. அவன் கடைசிக் காலம் அடைந்து பலவீனப்பட்டுப் போகும் காலத்தில் அவனுடைய பொருள் மற்றவருக்குச் சொந்தமாகிவிடுகிறது. ஆகையால், பொருள் மனிதனுடைய தேகத்தோடு சம்பந்தப்பட்டதே அன்றி, அவனுக்குள் இருக்கும் என்றைக்கும் அழியாத ஜீவாத்மாவுக்கும் அந்தப் பொருளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. மனிதருடைய உடம்பு எப்படி அற்ப காலத்தில் அழியும் தன்மை உடையதோ, அதுபோல, அதோடு சேர்ந்த பொருளும் விலகிப்போகும் தன்மை உடையது. மனிதன் என்றால் அது முக்கியமாக ஜீவாத்மாவைக் குறிக்குமே அன்றி, மூப்புப் பிணி சாக்காடு முதலியவற்றிற்கு இலக்கானதும், நீர்க்குமிழி போன்றதுமான உடம்பைக் குறிக்காது. ஆகையால் மனிதருக்குப் பொருள் பிரதானமல்ல. அவர்களுக்கு இன்றியமையாத தேக பாதைகளுக்கும் தேவைகளுக்கும் அற்ப பொருள் வேண்டும் என்பது அவசியமானாலும், உண்மையான தேவைக்கு மிஞ்சின அதிகப் பொருளைத் தேடுவதும், அதன் பொருட்டு மனிதர் தமது ஆயிசு காலத்தை வீணாக்குவதும் மதியீனமாய் இருப்பதோடு, பெருத்த நஷ்டமாகவும் முடிகிறது. உலகத்தில் உள்ள மனித கோடியை நாம் ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு மனிதருக்குள் இருக்கும் ஜீவாத்மாவும் படிப்படியாக முதிர்ச்சி அடைந்து பரிபக்குவ நிலைமையை நோக்கிக் கனிந்து கொண்டே போகிறது. கடவுளை நாம் நேரில் காணவே முடியாது. ஆனால் கடவுளின் தன்மையை அடைந்து கொண்டே போகும் ஜீவாத்மாக்களை நாம் மனித ரூபமாகக் கண்ணுக்கெதிரில் பர்ர்க்கிறோம். தகப்பன் என்றும் தாய் என்றும், பிள்ளை என்றும், அரசன் என்றும், பிரஜைகள் என்றும், குரு என்றும், சிவடியன் என்றும் ஜீவாத்மாக்கள் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டு, ஒன்றிடத்தொன்று பயின்று, ஒன்றுக்கொன்று துணையாயிருந்து, ஒவ்வொன்றும் சிறுகச் சிறுகப் பரிபக்குவ நிலைமையை அடைந்து கடவுளின் தன்மை பெற்று முடிவில் பரமாத்மாவோடு ஐக்கியப்படும் காலத்தை எதிர்நோக்கிச் செல்லுகிறது. எல்லா