பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

மாயா விநோதப் பரதேசி

பெண்பாவை இன்னாள் என்பது நாம் பகராமலே விளங்கி இருக்கும். ஆனாலும், அந்த உத்தமியின் பெயரைத் தினமும் ஒருதரமாவது சொன்னால், நமக்கும் நல்லகதி கிடைக்கும், ஆதலால், அதை வெளியிடுகிறோம். அந்த ஏந்தெழில் மடவன்னம், கோடீசுவரரான சுந்தரம் பிள்ளைக்கும், சிவபக்தையும் உத்தமோத்தமியுமான சிவக்கொழுந்தம் மாளுக்கும் ஜனித்த நமது வடிவாம்பாள்.

விசிப்பலகையின் மேல் உட்கார்ந்திருந்த வேலாயுதம் பிள்ளை ஒரு பாட்டின் கருத்தைப் படித்தபின் அதை மனத்தில் படிய வைப்பவர் போலத் தமது நெற்றியைத் தமது வலது உள்ளங்: கையால் தடவிக் கொடுப்பார்; பிறகு தமது மனைவியிடம் ஏதோ ஒரு வார்த்தை சொல்வார். அவ்வாறு செய்து வந்தவர் ஒரு பாட்டு முடிந்த பிறகு தமது மனைவியை நோக்கி, "கலியாணத்தின் போது நல்ல பௌர்ணமி காலமாக இருக்கும்படி. பார்த்து நாம் முகூர்த்த நாள் வைக்க வேண்டும். அப்போது கிரமப் பிரதக்ஷிணம் சிறப்பாக இருக்கும்" என்றார். திரிபுரசுந்தரியம்மாள் கீழே குனிந்த படி, "இன்று பிரதமை. இன்னம் இருபத்தைந்து தினங்களுக்குப் பிறகு முகூர்த்தம் வரும்படி ஏற்பாடு செய்யுங்களேன். சரியாய்ப் போகிறது" என்று பணிவாகக் கூறினாள்.

வேலாயுதம் பிள்ளை இன்னொரு பாட்டின் இரண்டொரு வரிகளைப் படித்த பின் சிறிது மௌனம் சாதித்து, "சம்பந்திகளை இறக்குவதற்கு நம் வடிவாம்பாளுடைய பங்களாதான் வசதியாக இருக்கும். கலியாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, நம்முடைய சுந்தரம் பிள்ளையையும், அவர்களுடைய பத்தியாரையும், நாம் பிரார்த்தித்து இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிட வேண்டும்" என்றார்.

திரிபுரசுந்தரியம்மாள், "நேற்றைய தினமே வடிவாம்பாள் இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் பிரஸ்தாபித்தாள், அப்படித்தான் செய்ய வேண்டும் என்று நாங்கள் இருவரும் பேசி எங்களுக்குள் ஒருவாறு முடிவு செய்திருந்தோம். இப்போது நீங்களும் அதே அபிப்பிராயத்தை வெளியிடுகிறீர்கள். சம்பந்திகளின் பெரிய அந்தஸ்துக்குத் தக்க இடம் வடிவாம்பாளுடைய பங்களாவைத்