பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

மாயா விநோதப் பரதேசி

கண்ணப்பா உள்ளே நுழைந்தான். அவ்வாறு பதறிய தோற்றத் தோடு அவன் வந்தது முற்றிலும் புதுமையாக இருந்தது ஆகையால், அதைக்கண்ட வேலாயுதம் பிள்ளையும். திரிபுரசுந்தரி அம்மாளும் திடுக்கிட்டு நிரம்பவும் ஆச்சரியமும் கவலையும் அடைந்து, பையன் என்னவிதமான செய்தி கொணர்ந்திருக்கிறானோ என்பதை அறிய ஆவல் கொண்டவர்களாய், அவனது முகத்தை உற்று நோக்கினர். அதுவரையில் மடப்பள்ளியில் தனது சிம்மாசனத்தில் வீற்றிருந்தபடி தனது மாமனார் மாமியாரினது சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த மடவன்னமான வடிவாம்பாளும் தனது புருஷன் "அப்பா! அப்பா!" என்று விபரீதக் குரலோடு அழைத்துக் கொண்டு வந்ததை உணர்ந்து திடுக்கிட்டெழுந்து விரைவாக வாசற்படியண்டை.. வந்து நின்று கொண்டு தனது கணவனது முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். அந்த ஒரு நொடியும் அந்த மடமங்கையின் மனம் பட்ட பாடு இன்னதென்று விவரிக்க சாத்தியமற்றதாக இருந்தது.

உடனே திரிபுரசுந்தரியம்மாள் நயமான குரலில், "என்ன தம்பீ விசேஷம்? ஏன் நீ இப்படி மாறிப் போயிருக்கிறாய்? என்ன நடந்தது? நம்முடைய மனிதர் யாருக்கும் கெடுதல் ஒன்றும் இல்லையே" என்று மிகுந்த வாத்சல்யத்தோடு வினவினாள். வேலாயதம் பிள்ளையோ, அவனே விஷயத்தை உடனே வெளியிடுவான் என்று மௌனமாகவும் கம்பீரமாகவும் இருந்த படியே அவனது வாயைப் பார்த்தார்.

அவன், "நம்முடைய விரோதியான கும்பகோணம் வக்கீல் சட்டைநாத பிள்ளையைத் தஞ்சாவூர் ஜெயிலில் வைத்திருந் தார்கள் அல்லவா! அவன் அங்கே இருந்து தப்பி ஓடிவந்து விட்டானாம்" என்றான்.

அந்த அதிசயச் செய்தியைக் கேட்ட மற்ற மூவரும் திடுக்கிட்டு வியப்பே வடிவாக மாறி சிறிது நேரம் ஸ்தம்பித்து மௌனமாய் இருந்து விட்டனர். அடுத்த க்ஷணத்தில் வேலாயுதம் பிள்ளை, "என்ன ஆச்சரியம்! இந்தச் சங்கதி நிஜமாயிருக்குமா? புரளிக்காகிலும் யாராவது இந்தப் பொய்யைக் கட்டிவிட்டிருப்