பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

மாயா விநோதப் பரதேசி

இருக்கிறாளென்பதை சற்றுமுன் வேலைக்காரியிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட மாசிலாமணி அத்தகைய மனமோகன கந்தர வடிவத்தைக் கண்டு, அவளால் கிடைக்கப்போகும் நிகரற்ற சுகத்தை அடைய வேண்டுமென்று நினைத்து ஆவல் பெருந்தியினால் தகிக்கப்பட்டு அங்கே வந்தான் ஆதலால், அதற்கிணங்க, ஒரே ஜோதியாகத் தனது கண்ணைப் பறித்துக்கொண்டு கட்டிலிற் கப்பால் போய் நின்ற சோபனப் பெண்ணைப் பார்க்கவே அவன் இரண்டொரு நிமிஷநேரம் மதிமயங்கி, உணர்வு கலங்கி, வைத்த விழி வைத்தபடியே நின்று, "ஆகா! என்னுடைய பாக்கியமே பாக்கியம்! இப்படிப்பட்ட மடமயிலை அணையக்கிடைத்த என் தவமே தவம் ரமாமணி இவளுடைய காலில் ஒட்டிய துசிக்கும் இணையாகமாட்டாள். அவளுடைய உடம்பு இறுகலாகவும் கை கால்களெல்லாம் கரனை கரணையாக உருண்டு திரண்டு தந்தத்தில் கடைந்தெடுக்கப்பட்டவை போலவும் இருப்பது தனித் தனியான ஓர் அழகாக இருந்தாலும், மொத்தத்தில் அவளுடைய தோற்றம் இவளுடைய தோற்றத்தைப் போல இவ்வளவு அதிகமாக மனசைக் கவரவில்லை. இவளுடைய கைகால்கள் முதலிய ஒவ்வோரங்கமும் அவளுடையது போல உருட்சி திரட்சியாகவும் தந்தத்தில் கடைந்தெடுக்கப்பட்டவைபோலவும் இருந்தாலும், அவளைக் காட்டிலும் இவள் சிறிது அதிக உயரமாயிருப்பதனால், இவளுடைய தோற்றம் கொடிபோல் இருக்கிறது. பெண்கள் இப்படி இருப்பது தான் அழகு. குழந்தைகளை வாரி எடுத்து அனைத்துக் கொள்வதுபோல அவ்வளவு சுலபத்தில் எடுத்து மார்போடணைத்துக் கொள்ளும்படி ஸ்திரீகள் பளுவில்லாமலும் இலேசாகவும் இருக்கவேண்டும். அவளது முகமோ பரந்த வடிவமானது. அமிதமான புத்தசாலித்தனமும் குறும்புத்தனமும் அந்த முகத்தில் வழிகின்றன. இவளுடைய முகமோ அண்டாகாரமாய் இருப்பதோடு மணிப்புறாவின் முகம்போல சாத்வீகத்தையும் உத்தம லக்ஷனங்களையும் காட்டுகிறது. அவளது தோற்றம் மூர்க்கமான ஆசாபாசங்களை வெளிப்படையாகக் காட்டுவதோடு, சமயங்களில் அவள் மகா கொடுமையான கோபம் முதலிய துர்க்குனங்களைக் காட்டக் கூடியவளென்பது நன்றாகத் தெரிகிறது. இவளோ பரிபூர்ணமான