பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

231

11-வது அதிகாரம்
நீர்மேல்குமிழி நீலலோசனியம்மாள்

னி நாம், ரமாமணியம்மாள் சென்னைக்குச் சென்ற வரலாற்றையும், அவ்விடத்தில் புரிந்த திருவிளையாடல்களையும் விஸ்தரிப்போம். செவ்வாய்க்கிழமை மாலையில், இடும்பன் சேர்வைகாரனால் கொண்டுவரப்பட்ட வண்டியில், ரமாமணியம் மாளும், அவளது தாய் தகப்பன்மாரும், அவர்களது வேலைக்காரனான போயியும் ஏறிக்கொண்டு கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனிற்குச் சென்றார்கள் அல்லவா. அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்த காலத்தில் இரவு நேரம் வந்துவிட்டது. ஆகையால், எங்கும் இருளே மயமாக நிறைந்திருந்தது ஆனாலும், ஸ்டேஷனில் ஆங்காங்கு விளக்குகள் கொளுத்தப்பட்டு மிகுந்த பிரகாசத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தன. மூன்றாவது வகுப்பு ஜனங்கள் உட்காரும் இடம் முழுதும் மூட்டை முடிச்சுகள் பிள்ளை குட்டிகள் சமேதராய் ஏராளமான ஜனங்கள் கூடியிருந்தனர். அடிக்கடி குதிரை வண்டி களும் ஒற்றை மாட்டு வண்டிகளும் வந்து புதிய பிரயாணிகளை இறக்கிவிட்டுத் திரும்பிப் போய்க் கொண்டே இருந்தன. அவ்வாறு வந்த ஜனங்கள் எல்லோரும் மூன்றாவது வகுப்புப் பிரயாணிகள் தங்கும் இடத்திற்கே சென்றனர். ஆனால், நமது ரமாமணியம் மாளை ஏற்றிவந்த வண்டி மூன்றாவது வகுப்புப் பிரயாணிகளின் இடத்தில் நிற்காமல், 1-வது வகுப்புப் பிரயாணிகளான சீமான் சீமாட்டிகளது உபயோகத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த பிரத்தியேகமான விடுதியின் வாசலில் போய் நின்றது. எல்லோரும் வண்டியை விட்டுக் கீழே இறங்கினார்கள். சென்னையில் அவர்களது உபயோகத்திற்குத் தேவையான ஆடைகளும், பாத்திரங்களும், மெத்தை தலையணை முதலிய சாமான்களும் நன்றாகக் கட்டப்பட்டு பிரத்தியேகமான வண்டியில் வந்து தாழ்வாரத்தில் இறங்கி, இடும்பன் சேர்வைகாரன், போயி ஆகிய இருவரது வசத்திலும் பார்வையிலும் இருந்தன. ரமாமணியம்மாளின் தாயார் தாங்கள் அன்றைய இரவு முழுதும் ரயிலில் சந்தோஷமாக இருந்து உண்டு களிப்பதன் பொருட்டு பலவகைப்பட்ட பகூடிண பலகாரங்களையும் இதர நொறுவைகளையும் பெருத்த