பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

மாயா விநோதப் பரதேசி

தொடங்கின. வண்டியின் கதவிற்கு அருகில் இருந்த சோபாவின் மீது தாயும் தந்தையும் உட்கார்ந்து கொண்டனர். அதற்கு அப்பால் மறைவாக இருந்த இன்னொரு சோபாவில் ரமாமணியம்மாளும் பக்கிரியா பிள்ளையும் உட்கார்ந்து கொண்டனர். அவ்வாறு தனிமையில் உட்கார்ந்து கொண்ட கள்ளக் காதலர் இருவரது மன எழுச்சியம் குதூகலமும் ஆனந்தமும், அப்போது, வர்ணிக்க இயலாத உச்ச நிலையை அடைந்துவிட்டன என்றே கருத வேண்டும். பக்கிரியா பிள்ளை ரமாமணியிடம் வைத்திருந்த வாஞ்சையும் பிரேமையும், அவளால் தனக்குக் கிடைக்கும் செல்வத்தையும் சிற்றின்ப சுகத்தையும் கருதியவையாக இருந்தன. ஆனால், அவன் மீது ரமாமணியம்மாள் கொண்டிருந்த மோகமும் பிரேமையும் அளவிட இயலாதவையாயும், அவனது பரஸ்பர வாஞ்சையைத் தவிர வேறு எவ்வித பிரதிபலனையும் கருதாத ஒரு வகைப் பைத்தியமாக இருந்தது. இரவு பகல் சதாகாலமும் அவன் தன்னோடு கூடவே இருக்க வேண்டும். தான் அவனிடம் அடிமை போல நடந்து கொண்டு சகலமான சௌகரியங்களையும் அவனுக்குத் தானே செய்து கொடுத்து எப்போதும் அவனுக்கு சந்தோஷம் உண்டாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அவன் வேறே எந்த ஸ்திரீயையும் கண்ணாலும் பார்க்கக்கூடாது, அவர்களைப் பற்றிய பிரஸ்தாபத்தைக்கூட அவன் தன்னிடம் எடுக்கக் கூடாது. தனது ஆசை முழுவதையும் அவன் தன்மீதே வைத்திருப்பவன் போல எப்போதும் நடந்து கொள்ள வேண்டும். தான் அவனுக்கு எதைச் செய்தாலும், மறுக்காமல் அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். தின்பண்டங்களை தான் எவ்வளவு கொடுத்தாலும், வேண்டாம் என்று சொல்லாமல் அவன் அவைகளை வாங்கி உண்ண வேண்டும். தனக்கு வயிறு நிறைந்து விட்டது, இனி இடமில்லை, போதும் என்று அவன் எந்த விஷயத்திலாவது சொல்வானாகிலும், அவளுக்கு உடனே கோபமும் அழுகையும் வந்துவிடும். மற்ற சகலமான வியவகாரங்களிலும் அவள் மகா தந்திரியாகவும், புத்திசாலியாகவும் இருந்தாள் ஆனாலும், பக்கிரியா பிள்ளையின் மீது அவள் வைத்திருந்த மகா பிரமாதமான வாத்சல்யத்தில் மாத்திரம் அவள் பைத்தியக்காரி போல ஒழுகி உண்மையிலேயே சித்தப்பிரமை கொள்ளத்தக்க