பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

மாயா விநோதப் பரதேசி

அன்றைய பகற் பொழுதும், இரவும் அவ்வாறு எவ்வித விசேஷ சம்பவமும் இன்றிக் கழிந்தன. ஆனால், இரவு இரண்டு மணி சுமாருக்கு விசாலாக்ஷியம்மாள், ரமாமணியம்மாள், அவளது தந்தை ஆகிய மூவரும் தனித்திருந்து தமக்குள் ஏதேதோ விஷயங்களைப் பற்றி நெடுநேரம் வரையில் ரகசியமாகப் பேசி முடிவு செய்து கொண்டிருந்தனர். விடியற்காலம் ஐந்து மணிக்கு நீல லோசனியம்மாள் எழுந்து குழாயண்டை போய் ஸ்நானம் முதலிய காலைக் கடன்களை முடித்துக் கொண்டு விசாலாகூஜியம்மாளிடம் வந்து மெதுவாக அவளைத் தட்டி எழுப்பி, “அம்மா! நான் திருவொற்றியூருக்குப் போய்விட்டு மாலையில் வருகிறேன். ஆனால், எனக்குத் துணையாக யாரையாவது என்னோடு அனுப்ப முடியுமானால், மிகுந்த உபகாரமாக இருக்கும்” என்றாள். உடனே விசாலாக்ஷியம்மாள், “சரி உங்கள் பிரியப்படி செய்யுங்கள். ஆனால், அவ்விடத்திற்கு உங்களைத் தனியாக அனுப்புவது சரியல்ல் என்று எங்களுக்கே தோன்றியது ஆகையால், நாங்களே உங்களோடு துணைக்கு மனிதரை அனுப்ப ஏற்பாடு செய்திருக்கிறோம். எங்களுடைய மருமகப் பிள்ளையும் திருவொற்றியூரைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ஆகையால், அவரை உங்களோடு அனுப்பத் தீர்மானித்திருக்கிறோம். அவரை அழைத்துக் கொண்டு போங்கள்” என்று கூறிவிட்டு அவ்விடத்தில் படுத்திருந்த பக்கிரியா பிள்ளையை எழுப்பிவிட்டாள். அன்றைய இரவிலேயே ரமாமணியம்மாள் அவனை ரகசியமாக எழுப்பி அவனுக்குச் செய்ய வேண்டிய போதனைகளைச் செய்து வைத்திருந்தமையால், அவன் எழுந்தவுடன் எவ்விதமான கேள்விக்கும் மறுமொழிக்கும் இடங்கொடுக்காமல், பிரயாணத்திற்கு ஆயத்தமானான். அவர்களுக்காக உடனே ஒரு குதிரை வண்டி வருவிக்கப்பட்டது.

அப்போது நீலலோசனியம்மாள் விசாலாகூஜியம்மாளோடு மறுபடியும் பேசத் தொடங்கி, “ஏனம்மா! நீங்கள் இந்த ஊரில் இன்னும் எத்தனை நாளைக்குத் திங்க உத்தேசிக்கிறீர்கள்? அந்தத் தகவலைச் சொன்னால், அதற்குத் தகுந்தபடி, நான் என்னுடைய யாத்திரைகளை முடித்துக் கொண்டு உங்களோடு புறப்பட ஆயத்தமாகிறேன்” என்றாள்.