பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

மாயா விநோதப் பரதேசி

மோதிரத்தை அணிந்திருந்த பக்கிரியா பிள்ளை அபாரமான திகிலும் கலக்கமும் அடைந்து நடுநடுங்கி நின்றான். அங்கிருந்த போயி, இடும்பன் சேர்வைகாரன் முதலிய ஒவ்வொரு வரும் “நான் ஒரு பாவத்தையும் அறியேன். என்னைச் சோதனை போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிகுந்த கவலையோடு கூறினர். அன்னியர்களான பிரயாணிகளும் அதுபோலவே குற்றவாளி அல்ல என்று கூறினர். உடனே விசாலாக்ஷியம்மாள் தனது புருஷனைப் பார்த்து, “சரி, எல்லோரும் இப்படியே இருக்கட்டும். நீங்கள் போய் போலீஸ்காரரை அழைத்துக் கொண்டு வாருங்கள்” என்றாள். அதைக் கேட்ட நீலலோசனியம்மாள், “மோதிரம் போனால் பீடை போயிற்று. இதற்காக போலீஸாரை ஏன் கூப்பிட வேண்டும்? யாரோ அந்த மோதிரத்தைக் கண்டு பிரியப்பட்டு அதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே வைத்து சந்தோஷம் அடையட்டும். போலீஸாரைக் கூப்பிட வேண்டாம்” என்றாள். அப்போது ரமாமணியம்மாளின் மனதில் ஒரு நினைவு தோன்றியது. உண்மையில் யார் திருடியவர் என்பது தெரியாவிட்டால், நீலலோசனியம்மாள் தங்கள் பேரில் சந்தேகங் கொண்டு தங்களை அயோக்கியர்கள் என்று எண்ணி, தங்கள் வீட்டில் இராமல் வேறிடத்திற்குப் போய்விட்டால், அதனால், ஐந்து லட்சம் ரூபாய் தங்களுக்கு இல்லாமல் போய்விடுமே என்று நினைத்த ரமாமணியம்மாள், “அப்படியல்ல அம்மா போலீசார் வந்துதான் ஆக வேண்டும். இப்போது உங்கள் மோதிரத்தை எடுத்தவர் நாளைக்கு என் நகைகளையும் எடுப்பார்கள். நீங்கள் போய் போலீசாரை அழைத்து வாருங்கள் அப்பா!” என்றாள். உடனே ரமாமணியின் தகப்பனார் கதவைத் திறந்து கொண்டு வெளியில் போய் சிறிது நேரத்தில் இரண்டு போலீஸ் ஜவான்களோடு திரும்பி வந்து சேர்ந்தார். தம்மை அழைத்து வந்தவரிடம் போலீசார் அந்தத் திருட்டின் விவரத்தையும், படுத்திருந்த மனிதர்கள் இன்னின்னார் என்பதையும் தெரிந்து கொண்டவர்கள் ஆதலால், அவர்கள் வந்தவுடனே நீலலோசனியம்மாளை நோக்கி, “அம்மா! இதோ இருக்கும் இந்த மனிதர் கையில் போட்டிருக்கிறாரே, இந்த மோதிரமா திருட்டுப் போனது?” என்றனர். நீலலோசனியம்மாள், “இல்லை, அதை அவருக்கு நானே கொடுத்துவிட்டேன். அது