பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

மாயா விநோதப் பரதேசி

இந்த ஊர் பெரிய ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே என்று ஒரு கருவி இருக்கிறது. அதன் உதவியால் மனிதருடைய உடம்பின் உள் பக்கத்தை போட்டோகிராப் பிடிக்கலாம். வயிற்றில் மோதிரம் இருந்தால், அந்த போட்டோ கிராப்பில் உடனே அது தெரிந்து போகும்” என்று கூறிய வண்ணம் அங்கிருந்த மூட்டைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் எடுத்துப் பரிசோதனை செய்து பார்த்தனர். மோதிரம் அகப்படவில்லை. போலீசார் அவ்விடத்தில் இருந்த அன்னியரான பிரயாணிகள் நால்வரையும், இடும்பன் சேர்வைகாரனையும், போயியையும் அழைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றனர். அவ்வாறு போகும் முன் அவர்கள் நீலலோசனியம்மாளும் மற்றவரும் பொழுது விடிந்த உடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு, அவர்களது ஊர் பெயர் முதலிய விவரங்களை எழுதிக் கொண்டு போயினர்.

அதன் பிறகு ரமாமணியம்மாள் முதலியோருக்குத் தூக்கமே பிடியாமல் போனது ஆகையால், அவர்கள் ஒருவரோடு ஒருவர் சம்பாஷித்துக் கொண்டே படுத்து மிகுதிப் பொழுதையும் கழித்தனர்; இடும்பன் சேர்வைகாரனும், போயியும் யோக்கியமான மனிதர்கள் ஆதலால், அவர்கள் மோதிரத்தைத் திருடி இருக்கமாட்டார்கள் என்றும், மற்ற நான்கு பிரயாணிகளுள் யாரோ ஒருவரே திருடியிருக்க வேண்டும் என்றும் தமக்குள் நிச்சயித்துக் கொண்டனர். விடியற்காலம் ஐந்து மணி சுமாருக்கு நீலலோசனியம்மாள் தனது வழக்கப்படி குழாயண்டை போய்த் தனது ஸ்நானம், அநுஷ்டானம் முதலியவைகளை முடித்துக் கொள்ள, அதற்குள் பொழுதும் விடிந்தது. அந்தத் திருட்டின் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோரது மனதிலும் தோன்றி வதைத்துக் கொண்டிருந்தது. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், உண்மை வெளிப்பட்டதா என்பதைத் தெரிந்துகொண்டு வரும்படி ரமாமணியம்மாள் தனது தந்தையைக் கேட்டுக் கொள்ள, அவர் உடனே புறப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விட்டு வெகு நேரம் கழித்து திரும்பி வந்து, “என்ன ஆச்சரியத்தைச் சொல்லுவேன்! நாம் யாரை யோக்கியர் என்று நினைத்தோமோ, அவன் தான் அயோக்கியத் தனம் செய்திருக்கிறான். பொழுது