பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 மாயா விநோதப் பரதேசி அந்தச் சமயத்தில் ரமாமணியம்மாளது நிலைமை இன்பமும் துன்பமும் கலந்த பரமசங்கடமான நிலைமையாக இருந்தது. தன் விஷயத்தில் வஞ்சகமாக நடந்து கொண்டவனான மாசிலாமணி யின் துஷ்டச் செய்கைகள் எல்லோருக்கும் தெரிந்து போகும்படி யான நிலைமை ஏற்பட்டுப் போனது அவளுக்கு ஒரு விதத்தில் இன்பகரமாகத் தோன்றியது ஆனாலும், அதிலிருந்து தன்னுடைய துர்நடத்தைகள் வெளியாகிவிடுமோ என்ற திகிலும் கவலையும் இன்னொரு புறத்தில் எழுந்து வருத்தலாயின. ஆகவே, தான் என்ன சொல்வதென்பதை அறியாதவளாய் அவள் வெட்கித் தலை குனிந்து நின்றாள். உடனே பெரிய டாக்டர் அந்த இரண்டு ஸ்திரீகளையும் நோக்கி, "சரி, நேரமாகிறது. நீங்கள் போகலாம். மிஸ்டர் வெல்டன் துரையின் தந்திரம் கைமேல் பலன் கொடுத்து விட்டது பேஷ்! பேஷ்! பலே! அவருடைய மூளை அற்புதமான மூளை. இந்த யந்திரம் சர்க்கார் பணத்தினால் வாங்கப்பட்டது. ஆகையால் இதை உடைக்க எங்களுக்கு அதிகாரமில்லை. இதைப்பற்றி நாங்கள் மேல் அதிகாரிகளுக்கு எழுதி அவர்களுடைய உத்தரவின்படி நடந்து கொள்ளுகிறோம். நீங்கள் போகும் முன் ஒரு காரியம் செய்யுங்கள். மேல் அதிகாரியிடத்திலிருந்து உத்தரவு வரும் பட்சத்தில், இந்த தகட்டின் கிரயத்தை நீங்கள் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு ஒரு வாக்குமூலம் எழுதி வையுங்கள்" என்றார். அவர்கள் அதற்கிணங்கி வாக்கு மூலம் கொடுத்துக் கையெழுத்துச் செய்தனர். பிறகு நீலலோசனியம்மாளும், ரமாமணியம்மாளும் அந்த அறையில் இருந்து வெளியில் வந்தனர். நீலலோசனியம்மாள் மற்றவளைப் பார்த்து, "அம்மா! நீ போய்ப் படுத்துக்கொள்; நான் இப்போது நேராக வக்கீலிடம் போகிறேன். போய் அவரிடம் இந்தக் கடிதத்தையும் கொடுத்து, நீ மாசிலாமணிப் பிள்ளையைப் பற்றிச் சொன்ன விவரங்களையும் தெரிவித்து, அவர் சொல்லும் யோசனைப்படி நடந்து கொள்ளுகிறேன். என்னுடைய சொத்துக் களை எல்லாம் மாசிலாமணிப் பிள்ளை பேரில் எழுதி வைத்து விடுவேனோ என்ற கவலையையே நீ கொள்ள வேண்டாம். என் சொத்து நியாயமான வழியில் வந்த சொத்து. அது அக்கிரமஸ்தர்