பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 17; கவலையும், கலக்கமும் அடைந்தவர்களாய் அப்படியப்படியே ஊமைகள் போல உட்கார்ந்திருந்தனர். அப்போது சுந்தரம் பிள்ளை மற்றவர்களைப் பார்த்து, "நம்மால் ஆவது ஒன்றுமில்லை. அவனன்றி ஓர் அணுவும் அசையாது. மனிதரை மனிதர் பார்த்துக் கெடுப்ப தென்பது ஒருநாளும் கூடாத காரியம். அதுவுமன்றி ஒருவனுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஆயிசு காலத்தில் ஒரு நிமிஷத் தையும் குறைப்பது எப்படிப்பட்ட மகாராஜனாலும் முடியா தென்பது உலகத்தில் நிதரிசனமாகத் தெரிந்த விஷயம். நம்முடைய கந்தசாமியை அந்தக் கும்பக்கோணத்தார்கள் தான் கொண்டு போயிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. பையனுடைய ஜாதகத்தை நாங்கள் இதற்கு முன் ஒரு தடவை பார்த்தோம். அவன் எவ்வித நோய் நொடியின்றிப் பூர்ண ஆயிசாக இருப்பான் என்று ஜோசியர் நிச்சயமாகச் சொன்னார். ஆகையால், நம்முடைய எதிரிகள் அவனுடைய உடம்பில் ஒட்டிய தூசிக்குக்கூட ஒரு கெடுதலும் செய்ய முடியாது என்பதை நாம் நிச்சயமாக எண்ணிக் கொள்ளலாம். அதே துஷ்டர்கள் ஆதியில் என் பெண்ணைக் குழந்தைப் பருவத்திலேயே அபகரித்துக் கொண்டு போனார்களே, அவர்களுடைய கருத்து எள்ளளவாவது பலித்ததா? பதினைந்து பதினாறு வருஷ காலமாய் அவர்கள் அரும்பாடுபட்டு அந்தப் பெண்ணை வளர்த்து முடிவில் அதை அதற்கு உரியவர்களிடம் ஒப்புவிக்கும்படி நேர்ந்ததல்லவா. அப்படியே தான் இப்போதும் அவர்களுடைய சதியாலோசனை எதிர்மறையான பலனைத்தான் தரப் போகிறது. இப்போது கிரக பேதத்தால் காலபலன் கொஞ்சம் தாறுமாறாக இருக்கிறது. அதற்கு ஒரு சாந்தியாக நாம் தெய்வ பூஜையை நிரம்பவும் பக்தி சிரத்தையோடு அதிக விமரிசையாய் நடத்துவதொன்றே போதுமானது. அதோடு ஏழைகளுக்கு அன்ன தானம் வஸ்திரதானம் முதலியவைகளை நாம் ஏராளமாக வழங்க வேண்டும். கலியானப் பெண்ணுக்கும் இப்போது காலபலன் சரியாக இராதென்றே தோன்றுகிறது. அதற்காக பல தினங்கள் சுமங்கலிப் பிரார்த்தனை நடத்தி நூற்றுக் கணக்கில் சுமங்கலி ஸ்திரிகளை உபசரித்து உண்பித்து ஒவ்வொரு தினமும் புடவை ரவிக்கை முதலியவை வழங்க வேண்டும். நாம் கடவுளை ஸ்தோத்திரம் செய்வதோடு, நம்மிடம் தானம் பெறும் ஆயிரக்