பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1 97 என்னால் தாங்க முடியவில்லையே! என் பிராணனும் போக மாட்டேன் என்கிறதே! என்று கூறிக் கோவென வாய்விட்டுக் கதறிக் கண்ணிரைக் கானாறாய் ஒடவிட்ட வண்ணம் வடிவாம் பாளை ஆசையோடு கட்டித்தழுவி இறுக அணைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, அவள் செய்ததை உணர்ந்த வடிவாம்பாளின் கண்களும் தானாகவே கண்ணிரைச் சொரிந்தன. அவளது மனதும் முகமும் கலங்கி மிகுந்த துயரத்தைக் கொண்டன. அவள் நிரம்பவும் நைந்திளகிய குரலில் பேசத் தொடங்கி, அம்மா! தைரியத்தைக் கைவிடாதே! என்னுடைய பழைய வரலாற்றை நீ கேட்டிருந்தால், நீ இப்படி வருந்தவே மாட்டாய். நான் எதிரிகளிடம் அகப்பட்டு, தப்பிப் போக வழியில்லாமல் என் உயிரை விடத் தீர்மானித்துக் கிணற்றில் விழுந்து விட்டேன். அப்படி இருந்தும் கடவுள் என்னை என் இஷ்ட தெய்வத்தினிடம் சேர்த்து வைத்தார். அப்போது தெய்வம் போல வந்து உதவி என்னைக் காப்பாற்றிய திகம்பர சுவாமியார் இப்போதும் சும்மா இருக்க மாட்டார் என்பது நிச்சயம். கடவுள் அவர் மூலமாக எப்படியும் நமக்கு நல்ல காலம் பிறக்கச் செய்வார். கவலைப்படாதே! அம்மா!" என்று கூறி அவளை அன்போடு தடவிக் கொடுத்தாள். அந்தச் சமயத்தில் வேலைக்காரி ஒருத்தி அங்கே வந்து "அம்மா! தீபாராதனை நடக்கப் போகிறது. உங்களை அழைத்து வரச் சொல்லுகிறார்கள் என்றாள். அதைக் கேட்ட வடிவாம்பாள் மனோன்மணியம்மாளைப் பார்த்து, "அம்மா! மனோன்மணி தீபாராதனை நடக்கப் போகிறதாம்; நம்மைக் கூப்பிடுகிறார்களாம். மெதுவாக எழுந்திரு அம்மா! உன் ஆடைகளை மாற்றிக் கொண்டு நெற்றிக்கு விபதி ശ്രക്കഥലെ அணிந்து கொண்டு போகலாம்" என்று மிகுந்த ஆத்திரத்தோடு கூறினாள். மனோன்மணியம்மாள் தனது கண்களை மூடியபடியே நிரம்பவும் ஹீனக்குரலில் பேசத் தொடங்கி, "அக்கா என்னை ஏன் அங்கே இழுத்து அநாவசியமாக வதைக்கிறீர்கள்? இப்போதோ, இன்னம் ஐந்து நிமிஷத்திலோ போய்விடும் போல என் பிராணன் பொடுக் பொடுக் கென்று துடித்துக் கொண்டிருக்கிறது. மகா