பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 மாயா விநோதப் பரதேசி இங்கே வந்து சேர்ந்து விடுவான். இனி நீங்கள் யாரும் கொஞ்சமும் கவலை என்பதே கொள்ள வேண்டாம். கலியாணப் பெண்ணும் இனி சந்தோஷமாய் இருக்கலாம். கலியாணப் பெண் தன் புருஷனை நினைத்து வருந்தி ஊணுறக்கமின்றி அநாவசியமாகத் தன்னைக் கொன்று கொண்டிருக்கிறது. பெண்ணுக்கு இன்றைய தினமே நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. இனி நீங்கள் யாரும் கவலையாவது, விசனமாவது கொள்வீர்களானால், நம்முடைய கோபத்திற்கு நீங்கள் பாத்திரமாவீர்கள். இந்த நிமிஷம் முதல் நீங்கள் எல்லோரும் சந்தோஷமாய் இருக்கக்கடவீர்கள். இந்த நம்முடைய கட்டளையை நீங்கள் மீறி நடந்தால், நீங்கள் எனக்குச் செய்யும் பூஜைகள் பிரயோஜனமற்றுப் போவது நிச்சயம். அடே குழந்தாய் வேலாயுதம்! நீயே நமக்கு உகந்த பக்த சிரோனமணி உனக்கு இனி ஒரு குறைவும் வராது. கூேடிமமாய் இரு" என்று நிரம்பவும் பலமான குரலில் கணிர் கணிர் என்று கூறிவிட்டுத் தனது வாயை மூடிக் கொண்டாள். அதற்கு மேலும் அவள் பேசுவாளோ என்று எல்லோரும் மிகுந்த ஆவலோடு அவளது வாயைப் பார்த்தனர். அவள் அதற்கு மேல் வாயைத் திறக்கவுமில்லை; கண்களைத் திறக்கவுமில்லை; மெளனமாக நின்றபடி கைகளையும் உடம்பை யும் முறுக்கிக் கொண்டு துவண்டு துவண்டு மயங்கி ஆடி விழுந்து கொண்டே பத்து நிமிஷ காலம் இருந்த பின் தெளிவடைந்து, வேலாயுதம் பிள்ளை நின்ற இடத்திற்குப் போய் கீழே உட்கார்ந்து மண்டியிட்டு சுவாமிக்கு நமஸ்காரம் செய்து எழுந்து விபூதிப் பிரசாதம் வாங்கிக் கொண்டு போய் ஜனக் கும்பலில் கலந்து கொண்டாள். அந்த எதிர்பாராத அதிசய சம்பவத்தைக் கண்டு அங்கிருந்தோர் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து பிரமித்து பேச்சு மூச்சற்று ஊமைகள் போல நின்றனர். அவர்களது பக்தியும் உருக்கமும் முன்னிலும் நூறுமடங்கு அதிகரித்தன. எல்லோரும் கடவுளைப் பல நாமங்கள் சொல்லி மனதார ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினர். கந்தசாமி க்ஷேமமாய் இருக்கிறான் என்றும், அவன் நான்கு தினங்களில் வந்து சேருவான் என்றும் தெய்வம் வாக்குக் கொடுத்ததைக் கேட்டு வேலாயுதம் பிள்ளையும், அவரைச் சேர்ந்த ஜனங்களும் மட்டற்ற ஆனந்தமும் மயிர்கூச்சலு மடைந்து