பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 மாயா விநோதப் பரதேசி சுமார் இரண்டு வருஷ காலம் அங்கே இருந்தார் அல்லவா? அவரை நீங்கள் எத்தனை தடவை பார்த்திருப்பீர்கள்? ஜெயிலர்:- நான் ஒரு நாளும் ஒவ்வொரு கைதியையும் பார்க்கக் கடமைப்பட்டவன். ஆகையால், அந்தச் சட்டைநாத பிள்ளையை யும் நான் ஒவ்வொரு நாளும் பார்த்திருக்கிறேன். ராயர்: அவருடைய அடையாளம் உங்களுக்கு நன்றாக தெரியுமல்லவா? ஜெயிலர்:- ஓ! தெரியும். ராயர்:- சரி! இதோ கைதிக்கூண்டில் இருக்கும் இருவருள் கொஞ்சம் குள்ளமாக இருக்கிறாரே. அவர் யார் என்பது தெரிகிறதா? ஜெயிலர்:- (கைதியை உற்றுப் பார்த்து) ஆம். அவர் சட்டைநாத பிள்ளையைப் போல இருக்கிறார்; ஆனால் இவர் துருக்க உடை தரித்திருக்கிறார். அது ஒன்று தான் பேதம். எதிர்கட்சி பாரிஸ்டர்சிவசிதம்பரம் பிள்ளை:- (எழுந்து கனைத்துக் கொண்டு ஜெயிலரைப் பார்த்து) ஐயா கைதிக் கூட்டில் இருப்பவர் சட்டைநாத பிள்ளையைப் போல இருக்கிறார் என்று நீங்கள் எதைக்கொண்டு சொன்னிகள்? ஜெயிலர்:- சட்டைநாத பிள்ளையின் உயரம், பருமன், நிறம், வயக, சாயல் எல்லாம் என் மனசில் பதிந்து போயிருக்கின்றன. இங்கே இருப்பவருடைய உயரம், பருமன் முதலிய அம்சங்கள் எல்லாம் என் மனசில் பதிந்திருப்பவை போலவே இருப்பதால், அவரே இவர் என்று கண்டுபிடித்தேன். பாரிஸ்டர்:- உலகத்தில் ஒருவரைப் போல இன்னொருவர் இருக் கிறார் என்று ஜனங்கள் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? ஜெயிலர்:- ஆம். கேட்டிருக்கிறேன். பாரிஸ்டர்- சட்டைநாத பிள்ளையின் உயரம், பருமன் முதலிய வைகளைப் போல இவருடைய உயரம் பருமன் முதலியவை இருக்கின்றன. ஆகையால், இவர் சட்டைநாத பிள்ளையைப் போல இருக்கிறார் என்று நீங்கள் சொல்லலாமே அன்றி, இவர்