பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 227 பாரிஸ்டர்:- வாஸ்தவம். அதையே தாங்கள் சொல்ல முடியா தென்கிறீர்களே; அப்படி இருக்க, இவர்தான் சட்டைநாத பிள்ளை என்று தாங்க்ள் சொல்ல முடியுமா? ரேகை நிபுணர்:- அதை எல்லாம் நியாயாதிபதி தீர்மானிக்க வேண்டுமன்றி, நான் சொல்ல முடியாது. பாரிஸ்டர்:- சரியான வார்த்தை. அதிருக்கட்டும். இன்னொரு விஷயம் நான் கேட்கிறேன். இந்த ரேகை சாஸ்திரம் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறதே. இதை எப்படிக் கண்டு பிடித்தார்கள்? இந்த உலகத்தில் உள்ள சகலமான மனிதர்களுடைய கைவிரல் ரேகை யைப்போல இன்னொருவருடைய ரேகை இருக்கவில்லை என்பதை நிர்த்தாரணம் செய்திருக்கிறீர்களா? ரேகை நிபுணர்:- (சிரித்துக் கொண்டு) அப்படிச் செய்யவில்லை. பாரிஸ்டர்- அப்படி இருக்க, ஒருவருடைய விரல் ரேகையைப் போல மற்றொருவருடைய விரல் ரேகை இருக்காதென்பது நீங்கள் துணிந்து முடிவாகச் சொல்ல முடியுமா? ரேகை நிபுணர்:- பரீகூைடி செய்து பார்த்த வரையில், ஒருவருடைய விரல் ரேகையைப் போல மற்றவருடைய விரல் ரேகை இருக்கவில்லை. அதிலிருந்து, எல்லோருடைய விரல் ரேகையும் அப்படித்தான் ஒன்றுக்கொன்று ஒத்துக்கொள்ளா தென்று நிர்ணயித்திருக்கிறார்கள். பாரிஸ்டர் ஆகையால் இது கடைசி வரையில் பூர்த்தியாய் சோதனை செய்து நிர்ணயிக்கப்பட்ட சாஸ்திரமல்ல. யூகத்தின் மேல் நிர்ணயிக்கப்பட்ட சாஸ்திரம்; அல்லவா? ரேகை நிபுணர்:- அப்படித்தான் சொல்ல வேண்டும். பாரிஸ்டர்:- சந்தோஷம். நான் இன்னொரு கேள்வி கேட்கிறேன். ஒரு தாய்க்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறார்கள். இரண்டு குழந்தைகளும் சகலமான அங்கங்களிலும் ஒரே மாதிரி தோற்ற முடையவர்களாக இருக்கிறார்களே. அப்படிப் பட்டவர்களுடைய கைவிரல் ரேகைகளை நீங்கள் எப்போதாவது சோதனை செய்ததுண்டா?