பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 மாயா விநோதப் பரதேசி ஜெயில் நிஜார் போடுவது சட்ட விரோதம். ஆகையால், ஜெயில் நிஜார் போட்டு, போட்டோ எடுக்க, நாங்கள் இணங்க மாட்டோம். மற்றப்படி தலைப்பாகை, சட்டை, பட்டுக்கரை வேஷ்டிகள் தரிப்பது இந்துக்களின் வழக்கமே அன்றி, அவைகளை முஸ்லிம் அணிவது அவர்களுடைய ஜாதி ஆசாரத்திற்கும் பழக்கத்திற்கும் ஒவ்வாத காரியம். என் கட்சிக்காரர் அதற்கு இணங்கினால், மற்ற முஸ்லீம்கள் இவரைப்பற்றி அவமதிப்பாக எண்ணுவார்கள். ஆகையால், முகம்மதிய மதஸ்தர்களுக்குள் பழக்கமில்லாத காரியத்தைச் செய்யும்படி ஜட்ஜூ துரை அனுமதிப்பது நியாய சம்மதமாகாது. இப்போது என் கட்சிக்காரர் என்ன ஆடைகளில் இருக்கிறாரோ இப்படியே போட்டோப் படம் வேண்டுமானால் பிடித்துக் கொள்ளலாம். அதற்கு நாங்கள் சம்மதிக்கிறோம்" என்றார். ஜட்ஜி துரை சிறிது நேரம் யோசனை செய்து, "பாரிஸ்டருடைய ஆட்சேபனைகள் நியாயமாகப் படுவதால், ராயர் கேட்டுக் கொண்டபடி போட்டோ எடுக்க நான் உத்தரவு கொடுக்க முடியாது. வாதி கட்சியின் சாட்சியம் இவ்வளவுதான் என்று நினைக்கிறேன். இனி நீங்கள் இருவரும் உங்கள் வாதங்களைத் துவக்கலாம், இதில் ஒரு விஷயம்; சட்டைநாத பிள்ளை சிறைச் சாலையில் இருந்து தப்பி ஓடியது சந்தேகமற ருஜூவான விஷயம் ஆதலால், அதைப் பற்றி வாதி கட்சியார் எவ்வித ருஜூவும் கொடுப்பது தேவையில்லை. நம்முடைய பாரிஸ்டர் அதைப் பற்றி ஆட்சேபிக்கா விட்டால், அதை விட்டு அந்த சட்டைநாத பிள்ளை இவர்தானா என்ற விஷயத்தை மாத்திரம் ஆராய்ச்சி செய்வோம்" என்றார். - பாரிஸ்டர், "ஓ! அதைப்பற்றி எனக்கு ஆட்சேபனையும் இல்லை. இவர் தானா சட்டைநாத பிள்ளை என்ற விஷயம் ஒன்றையே நாம் கவனிக்கலாம்" என்றார். உடனே ராயர் வெகு துடியாய் எழுந்து நின்று, "அப்படியானால் என் வேலை இன்னமும் சுலபமானதாயிற்று. சிறைச்சாலையில் இருந்து பலவந்தமாக விடுவிக்கப்பட்டு ஓடிப்போனவரான சட்டைநாத பிள்ளையே கமாலுதீன் சாயப்பு என்று பெயர் வைத்துக் கொண்டு