பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 253 அடைந்தவனாய் ஆவல் தீய்க்கு இரையாய் இருந்து வந்தான். தபால் மூலமாக வந்த கந்தசாமியின் பெண் வேஷ வடிவம் எடுக்கப்பட்ட படத்தை அவன் ஆசையோடு வாங்கிப் பார்த்து, "ஆகா இந்தப் படம் அவன் இருந்த மாதிரியே இருக்கிறதே! முரடர்களிடம் அகப்பட்டுக் கொண்டவனுக்கு இவ்விதம் படம் பிடிக்க எப்படி சந்தர்ப்பம் ஏற்பட்டதென்பது தெரியவில்லையே! அதுவுமன்றி, இவன் டைப் அடிப்பதற்கு எப்படி முடிந்தது! இப்படித்தான் செய்தி அனுப்பினானே, தான் இன்ன இடத்தில் இன்னவிதமான நிலைமையில் இருப்பதனால், இன்றைய தினம் புறப்பட்டு வருகிறேன் என்று இவன் ஏன் எழுதி இருக்கக்கூடாது. இதில் இன்னொரு அசம்பாவிதமும் இருக்கிறது. சாதாரணமாக இவன் ஸ்திரீகளிடத்தில் பழகுவதற்கே நிரம்பவும் லஜ்ஜைப்படுகிற சுபாவம் உடையவன். இவன் மற்ற ஆண்பிள்ளைகளுக்கு இந்த விஷயத்தை எழுதாமல், தனக்கு மனைவியாக வரிக்கப்பட்டிருப் பவளும், இவனுடைய மனப்போக்குக்கு விரோதமான நடையுடை பாவனைகளைக் கொண்டிருந்தவளுமான மனோன்மணி யம்மாளுக்குத் துணிந்து படமனுப்பி செய்தி எழுதி விடுத்திருப்பது எனக்கு அசாதாரணமாகப் படுகிறதே யன்றி சாதாரணமாய் நடக்கக் கூடியதாய்த் தோன்றவில்லை. மற்றவர் இதை உண்மை என்று நம்பி ஒருவாறு தேறுதல் அடைந்திருப்பதை நாம் ஏன் கெடுக்க வேண்டும். இன்னம் நான்கு தினங்களில் அவனே வருவான் என்று சுவாமி வாக்குக் கொடுத்தது எப்படித்தான் முடிகிறதோ பார்க்கலாம்" என்று தனக்குத் தானே ஆட்சேபனை சமாதானங்கள் செய்துகொண்டு அவ்விடத்திலேயே இருந்து வந்தான். ஞாயிற்றுக் கிழமை, திங்கட்கிழமை ஆகிய இரண்டு தினங்களும் கழிந்தன. செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்தது. மற்ற தினங்களில் நடந்தது போல, அன்றைய தினமும் பூஜை தானதருமங்கள் முதலியவை நிரம்பவும் சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் நடந்தேறின. ஆவேசம் வந்து வாக்குக் கொடுத்த தினம் முதல் அது நான்காவது தினம் ஆதலால், அந்த பங்களாவில் இருந்தோரும், தானதருமங்கள் பெற ஆயிரக்கணக்கில் வந்தோரும் கந்தசாமி எப்படியும் அன்றைய தினம் இரவிற்குள் வந்து சேர வேண்டும் என்று கூறிய வண்ணம் அவன் எப்போது வருவானோ என்ற ஆவலே நிறைந்தவராக