பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 255 பரப்பிக் கொண்டிருந்தன. அத்தகைய இனிய பூஞ்சோலைக்குள் சென்ற கோபாலசாமி அப்போதும் கந்தசாமி வரவில்லையே என்றும், சுவாமி வாக்குக் கொடுத்தது பலிக்குமோ, பலிக்காதோ என்றும், முற்றிலும் குழம்பிக் கலவரமடைந்த மனத்தினனாய்ச் சென்று அங்குமிங்கும் சிறிது நேரம் உலாவிவிட்டு அவ்விடத்தில் ஒரு கமுகுத் தோப்பில் தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சல் பலகையைக் கண்டு அதன் மேல் உட்கார வேண்டும் என்ற ஆசை கொண்டு, அதனிடம் சென்று உட்கார்ந்து கொண்டு கால் நாழிகை காலம் கழித்தான். அவ்விடத்திலும் அவனது மனம் சாந்தம் அடையவில்லை. ஒரு வேளை அந்நேரம் கந்தசாமி பங்களா விற்குள் வந்திருப்பானோ என்ற எண்ணம் உண்டாயிற்று. தான் அப்போது பூஞ்சோலையில் இருப்பது தவறெனவும், உடனே தான் பங்களாவிற்குப் போக வேண்டும் என்றும் நினைத்தவனாய், கோபாலசாமி எழுந்திருக்க முயன்ற காலத்தில் அவனுக்குப் பின் பக்கத்தில் யாரோ ஒருவர் திடீரென்று தோன்றித் தமது கைகளால் அவனது கண்கள் இரண்டையும் இறுக மூடிக்கொண்டதை உணர்ந்த கோபாலசாமி, "யார் அது? கண்ணப்பாதான். நிச்சயம். நூறு ரூபாய் பந்தயம். கைவிரல்கள் நன்றாக அடையாளம் சொல்லு கின்றன. கண்ணப்பாதான்" என்று அழுத்தமாகவும் அன்போடும் கூறினான். அவனது கண்களைப் பொற்றினவன், "அடேய் கோபாலசாமி! உன் குறி வண்ணான் குறி மாதிரி எப்போதும் தவறுகிறதில்லை. ஆனாலும் நீ இப்போது தோற்றுப் போனாய். போடு பந்தயப் பணத்தை இப்படி" என்று வேடிக்கையாகவும் மகிழ்ச்சியோடும் கூறிய வண்ணம் தனது கைகளை விலக்க, அவனது குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு உடனே திரும்பிப் பின்புறம் பார்த்த கோபாலசாமி, "ஆ நீயா" என்ற கூச்சலுடன் தன்னை முற்றிலும் மறந்து அப்படியே துள்ளிக் குதித்துப் பாய்ந்து, "அப்பா கந்தசாமி! வந்தாயா? ஆகா! என்ன ஆச்சரியம்! நீ இந்தச் சோலைக்கு எப்படி வந்தாய்? நான் இங்கே வந்திருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டு இங்கே வந்தாயா? நீ உண்மையில் கந்தசாமிதானா? அல்லது, என் கண்கள் என்னை ஏமாற்றுகின் றனவா என்று மிகுந்த வியப்போடு கூறி ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து தனக்குப் பின்னால் வந்து நின்ற கந்தசாமியை