பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மாயா விநோதப் பரதேசி வந்தார்கள். உடனே புறப்பட்டு நாங்களும் வந்தோம். ೧ು. அம்மா, இப்படி வந்து, இந்த மங்களகரமான வஸ்துககளை உன் கையாலேயே வாங்கி அப்பால் வை தங்கமே என்று கரை புரண்டோடிய வாஞ்சையோடு கூற, மனோன்மணியம்மாள் திக்பிரமை கொண்டு சிறிது நேரம் திணறி நின்றுவிட்டாள். அவர்கள் அநாகரிகர்களான மனிதர்கள் என்று நினைத்ததற்கு மாறாக, அவர்கள் அன்பின் வடிவாகவும், மரியாதைக்கு உற்பத்தி ஸ்தானம் போலவும், நற்குணங்களுக்கே பீடிகை போலவும் இருந்ததைக் காண, அவள் அவர்களிடம் கொண்டிருந்த வெறுப்பில் சிறிதளவு விலகியது. அவர்கள் ஏதாவது மரியாதைப் பொருள்களைக் கொடுத்தால் அதை எப்படி வாங்குவதென்பதை சற்று நேரத்திற்கு முன் வேலைக்காரி மனோன்மணியம்மாளுக்குச் சொல்லி வைத்திருந்தாள் ஆதலால், அந்த மடந்தை தன்னை முற்றிலும் மறந்து வேலைக்காரி சொன்னது போலவே செய்யத் தொடங்கி, குனிந்த தலையை நிமிர்க்காமல் மடவன்னம் போலவும், தோகை மயில் போலவும் மிருதுத் தன்மையே வடிவெடுத்தது போல நடந்து சென்று தனக்கெதிரில் நின்ற திரிபுர சுந்தரியம்மாளின் முன் மண்டியிட்டு நமஸ்காரம் செய்ய, திரிபுரசுந்தரியம்மாள் அளவற்ற மகிழ்ச்சியும் குதுகலமும் பூரிப்பும் அடைந்து, "அம்மா! நீ மகராஜியாய் தீர்க்க சுமங்கலியாய் சிரஞ்சீவியாய் வாழ வேண்டும்" என்று ஆசீர்வதித்தாள். அதைக் கேட்டுக் கொண்ட நமது மனோன்மணியம்மாள் பக்கத்தில் நின்ற வடிவாம்பாளுக்கு எதிரிலும் சென்று அவளுக்கும் நமஸ்காரம் செய்ய எத்தனித்தாள். உடனே வடிவாம்பாள் மிகுந்த வாத்சல்யத் தோடு, "அம்மா! எனக்குக் கூடவா நீ நமஸ்காரம் செய்ய வேண்டும். வேண்டாம் அம்மா இந்தத் தட்டை வாங்கிக்கொள்' என்று கூறி, அவள் தன்னை நமஸ்கரிக்காமல் தடுத்து, வேலைக்காரியிடத்தில் இருந்த தட்டை வாங்கி மனோன்மணியம்மாளிடம் கொடுக்க, அவள் அதை வாங்கித் தனது வேலைக்காரியிடம் கொடுத்தாள். அவள் அவ்வாறு பணிவாகவும் மரியாதையாகவும் நடந்து கொண்டதைக் கண்ட திரிபுரசுந்தரியம்மாளும் வடிவாம்பாளும் மனங்கொள்ளா மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்தவர்களாய் ஒருவரை ஒருவர்