பக்கம்:மாய வினோதப் பரதேசி 3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 57 மூன்று மணிக்கு இந்த ஊர் கவர்னர் வீட்டிலிருந்து டெலிபோனில் எனக்கு ஒரு செய்தி வந்தது. கவர்னருடைய மாளிகையில் இருந்த ஒரு குசினிக்காரன் சில நகைகளைத் திருடிக் கொண்டு ஒடிப்போய் விட்டதாகவும், உடனே புறப்பட்டு வரும்படியாகவும் எனக்குச் செய்தி கிடைத்தது. நான் உடனே புறப்பட்டு கவர்னருடைய மாளிகைக்குப் போய், அந்தத் திருட்டைப்பற்றி விசாரணை செய்து, அந்தக் குசினிக்காரனைக் கண்டு பிடிக்க எத்தனித்துப் பல இடங்களிலும் துப்பு விசாரித்து கடைசியில் அரக்கோணத்திற்குப் போய் அவனைப் பிடித்துக் கொண்டு இன்று சாயுங்காலம் வந்து சேர்ந்தேன். அவனிடம் இருந்த நகைகளை எல்லாம் கைப்பற்றி உடனே கவர்னருக்கு அனுப்பி விட்டு, அவனைப் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரோடு சப் ஜெயிலுக்கு அனுப்பினேன். நான் அரக்கோணத்தில் இருந்து சென்டிரல் ஸ்டேஷனில் வந்து இறங்கிய காலத்தில் எதிரில் இருந்த ஆஸ்பத்திரி என் கண்ணில் படவே, எனக்கு அந்த கோபாலசாமியின் நினைவு வந்தது. குசினிக்காரனை நான் சப் இன்ஸ்பெக்டர் வசம் அனுப்பிவிட்டு, நேராக ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து பெரிய டாக்டரைக் கண்டு கோபாலசாமியின் ജ്ഞാഞഥഞഥ பற்றி விசாரித்தேன். தாங்கள் எத்தனையோ மருந்துகள் கொடுத்துப் பார்த்ததும், வேறு பல சிகிச்சைகள் செய்ததும் பலன் தரவில்லை என்றும், அவனுடைய நாடி நிரம்பவும் துர்ப்பலமாய் அடித்துக் கொள்வதாகவும், அவன் பொழுது விடிவதற்குள் அநேகமாய் இறந்து போவான் என்றும் அவர் சொன்னார். அதைக் கேட்ட உடனே என் மனம் மிகுந்த விசனத்தையும் சஞ்சலத்தையும் அடைந்து விட்டது. கடைசியாக நான் அவனை நேரில் பார்த்து விட்டு உங்களிடம் வரலாம் என்று நினைத்து அவன் இருந்த இடத்திற்குப் போனேன். போன காலத்தில், அந்த ஆஸ்பத்திரியின் இரண்டாவது டாக்டரான முதலியாரும், இதோ என்னோடு வந்திருப்பவரும் அங்கே வந்து சேர்ந்தார்கள். இதோ என்னோடு வந்திருக்கிறவர் எப்போதும் இருப்பது கல்கத்தாவாம். அந்த ஊரில் இவர் ஒரு பிரபலமான டாக்டராம். இவருடைய பெயர் மிஸ்டர் வெல்டன் என்பதாம். இந்த ஊரில் உள்ள கோடீசுவரரான யாரோ ஒரு செட்டியாருக்கு முக்கியமான ஒரு வைத்தியம் செய்வதற்காக அவர் இவரைத் தருவித்தாராம். இந்த ஊருக்கு வந்த இடத்தில், இவருக்கும் இந்த