பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

நா. வானமாமலை

கதாபாத்திரங்கள் அனைத்துமே, முக்கியமானவையாயினும், முக்கியமற்றவையாயினும் ஸ்தூல நிலைமைகளின் வளர்ச்சிக்கேற்ப உணர்ச்சியாலும் நடைமுறையாலும் செயல்படும் பாத்திரங்கள்.

பொன்னிலனின் கரிசல், இந்திரா பாாத்தசாரதியின் சுதந்திர பூமி, ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ராஜநாராயணன், அழகிரிசாமி சிறுகதைகளில் வரும் கதைமாந்தர்கள்.லெனினுடைய 'concrete man in concrete environment 'என்ற சூத்திரத்திற்கு உதாரணங்கள். உண்மையான கலைஞன் தனது படைப்பை வாழ்க்கையிலிருந்துதான் தொடங்குகிறான். தான் காணும் மக்களைத்தான், தன்னை ஆகர்ஷிக்கும் மக்களைத்தான் கலைப்படைப்பாக ஆக்குகிறான். புறவயமான, ஸ்தூலமான, வரலாற்று ரீதியான நிலைமைகளில் வாழும் மக்களை, அவர்கள் வாழும் சமூகத்தின் types ஆக, அல்லது அவர்கள் வாழும் வரலாற்றுக் காலத்தின் types ஆகக் கலைஞன் (Social types or historical types) படைக்கிறான்.

இதற்கு முன் குறிப்பிட்டது போலக் கலைப்படைப்பு என்பது, உலகைக் கலையால் பிரதிபலிப்பது மட்டுமன்று, புதிய கலை மதிப்புகளைப் படைப்பதும் ஆகும். கலைப் படைப்பு என்கிற செயல்முறை மிகவும் சிக்கலானது. இது ஒருவழிப்பாதையன்று. கொள்கை, நடைமுறையின் இணைப்பு, வரலாறும் கதைப் பொருளும், கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம், யதார்த்தமும் கற்பனையும், புனைகதைகள் இவை எல்லாவற்றையும் துணுக்கமாகக் கையாளவேண்டும். இவை யாவற்றையும் பகுத்தாய்வு செய்து தனது கதைப் பொருளுக்குப் பொருத்தமான விவரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, நோக்கம் பிறழாமல், கதை, காவியம், சிற்பம் படைக்கிறவனே சிறந்த கலைஞன் ஆவான் . தியோடோர் டிரீஸர் என்ற அமெரிக்க நாவலாசிரியர் அமெரிக்கச் சமுதாய வாழ்க்கை பற்றிப் பல நாவல்கள் எழுதினார். அதில் 'அமெரிக்க சோக நாடகம்' (American Tragedy) என்பது தலைசிறந்தது. இதற்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என்பதே நாவலின் சிறப்பைக் காட்டப் போதுமானது. சோவியத் பிலிம் என்ற நிறுவனம் நாவலைப் படமெடுக்க முன்வந்தது. ஐஸன்ஸ்டீன் படக்கதைகூடத் தயாரித்து முடித்துவிட்டார். ஆனால் படம் எடுக்க பாரமெளன்ட் பிக்சர்ஸ் என்ற அமெரிக்க பிலிம் கம்பெனி ஆட்சேபணை கிளப்பியது. சோவியத் படம் எடுக்கப்படவில்லை.

ஐஸன்ஸ்டீன் 'அமெரிக்க சோக நாடகம்' பற்றிக் கூறினார்: "ஹட்லைன் நதி போல அகன்றதும் ஆழமுடையதும்