பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

நா. வானமாமலை

வேண்டும் என்ற 'தேடல்' உணர்ச்சி ரஷியாவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சி பற்றி அறிந்து கொள்ளவும், தன்னுடைய பிரச்சினையோடு இணைத்துப் புரட்சியின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கவும் துண்டியது. அவர் 1928இல் சோவியத் ஆனியனில் பயணம் செய்தார். ஒரு கலைஞனின் பார்வையோடும், தனது நாவலில் எழுப்பிய பிரச்சினைகளுக்கு விடை கிடைக்குமா என்ற வினாவோடும் அவர் சோவியத் அமைப்பையும் வரலாற்றையும் ஆராய்ந்தார். அதன் பின்னர் அவர் தம்முடைய பிரச்சினைகளுக்கும், 'சோக நாடகத்தின் பிரச்சினை'களுக்கும் தீர்ப்பை ரஷ்யப் புரட்சியைப்பற்றி அறிந்து கொண்ட தன் மூலம் புரிந்து, தமது நாட்டின் சோக நாடகத்தின் பிரச்சினைகளின் தீர்வுக்கும் சோஷலிசமே வழியென்று கண்டார்.

'எனக்கு வாழ்க்கை பற்றிய கொள்கைகள் எதுவும் கிடையாது' என்று முன்னர் கூறிய டிரீஸர் மனத்தில் புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டது. டிரீஸர் உலகத் தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட இயக்கங்களுக்கு நெருக்கமாக வந்தார். அமெரிக்காவிலும் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு ஆதரவு தந்தார். 1928இல் இருந்து 1945 வரை தத்துவக் குறிக்கோளோடும் உலகக் கண்ணோட்டத் தெளிவோடும் அமெரிக்கச் சோக நாடகத்தை, அமெரிக்க இன்ப நாடகமாக மாற்றும் தேடலில் அவர் கலைப் படைப்புகளைப் படைத்தார். மக்கள் உணர்வைக் கூர்மையாக்குகின்ற பிரச்சார இலக்கியத்தையும் அவர் படைத்தார். 'அமெரிக்காவின் சோகம்' (1931), 'அமெரிக்கா காப்பாற்றப்பட வேண்டும்' (1941) என்ற அரசியல் பிரசார நூல்கள் எழுதினார்.

இறுதியாகத் தாம் மனதில் ஏற்படுத்திக் கொண்ட குறிக்கோள்களுக்காகத் தொழிலாளி வர்க்கத்தை ஒன்று திரட்டிப் பாடுபடுகின்ற இயக்கம் கம்யூனிஸ்ட்டுக் கட்சியென்றுணர்ந்து 1945இல் அதில் சேர்ந்தார்.

எனது வாழ்க்கையின் தர்க்கரீதியான கதியும், எனது பணியின் இயக்கமும் என்னைக் கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினன் ஆகும்படி வழி காட்டின

என்று அவர் எழுதினார்.

படைப்பு என்பது எவ்வளவு சிக்கலான அம்சங்கள் கொண்ட ஐக்கியமான கூட்டு என்பது டிரீஸரின் வாழ்க்கையில் விளங்கும். புறஉலகைச் சித்தரிக்க, அகஉலக அகற்சியும் தத்துவ நோக்கும் எப்படித் தேவையாகின்றன என்பது புரட்சி பற்றிய கல்வியும் ஆராய்ச்சியும் எப்படி அவருடைய நாவலில் கிளப்பியுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கத் துணை செய்தன என்பது