பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றக்கூடிய பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் வடிவம் இருக்கும். பாட்டாளி வர்க்க அரசின் உள்ளடக்கம் அதன் சர்வாதிகாரமாக இருந்த போதிலும், வெவ்வேறு நாடுகளின் வரலாற்று நிலைமைகளைப் பொறுத்தும், சமுதாய வர்க்க உறவுகளைப் பொறுத்தும், மேற் கூறிய பிற காரணிக்ளேயும் பொறுத்தும், வடிவங் களில் மாறுபடும் என்பதை தற்காலப் புரட்சிகளால் தோன்றிய பாட்டாளி வர்க்க சோஷலிஸ் அரசு களின் அனுபவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சோஷலிஸ் அரசின் வளர்ச்சியும், கம்யூனிஸ் நிர்மானமும் சோஷலிஸம் வெற்றி பெற்று சுரண்டும் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்ட பின்னர், தொழிலாளி வர்க்க அரசு, விரோதி வர்க்கங்களை ஒடுக்க வேண்டிய அவசியமில்லாமல் போகிறது. எனவே அது ஒடுக்கு முறைக் கருவி என்ற நிலையிலிருந்து விடுபடுகிறது. விவசாயிகள், சிறுநிலவுடைமையாளர்களாக இருந்த நிலை சோஷலிஸ் சமுதாயத்தில் மாறி விடுகிறது. அவர்கள் உற்பத்திச் சாதனங்களை பொதுவில் சொந்தமாகக் கொண்ட கூட்டுப்பண்ணை விவசாயி களாகவோ, அல்லது அரசாங்கப்பண்ணை ஊழியர் களாகவோ,கூட்டுறவுப் பண்ணை விவசாயிகளாகவோ மாறி விடுகிருர்கள். அவர்கள் சோஷலிஸ்ப் பாதையிலிருந்து ஊசலாடுவதற்குரிய காரணங்கள் மறைந்து விடுகின்றன. அதனால் அவர்களுடைய ஊசலாட்டத்தைத் தடுக்கவேண்டிய அவசியம் பாட் டாளி வர்க்க அரசுக்கு இல்லாமல் போகிறது. தொழிலாளி வர்க்கமும், விவசாயி வர்க்கமும், ஆார்க்ளிய லெனினிய தத்துவத்தின் அடிப்படை யில் ஒற்றுமைப்படுகின்றன. இவ்விரு வர்க்கங் களின் நேச உறவு, உயர்ந்த நிலையை அடைகிறது.

  1. #6