பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர்க்கங்களும் முன்போல் வாழமுடியாது என்ற நிலைமைக்கு வர வேண்டும். அடக்கப்பட்டவர்க்கங்களுடைய துன்பங்கள் அவர்களது சகிப்புத் தன்மையின் எல்லையை அடைந்துவிட வேண்டும். மேற் குறிப்பிட்டக் காரணங்களால் பொது மக்களின் எதிர்ப்புச் செயல் கள் அதிகப்பட வேண்டும். நெருக்கடி நிலைமை களாலும், ஆளும் வர்க்கங்களின் செயல்களாலும் அவர்கள் செயல்பாட்டிற்கு உந்தித் தள்ளப்படு கிரு.ர்கள்.' மேற்கூறிய நிலைமையை புரட்சி நிலைமை என்று லெனின் அழைக்கிருர். இத்தகைய நிலைமை இல்லா மல் செயற்கையாக யாரும் புரட்சியை உற்பத்திச் செய்துவிட முடியாது. பிறவியல் நிலைமைகள் பக்குவமாகும் ப்ொழுது மக்களின் அகவியல் உணர் வும்.அதற்கு பொருத்தமாக இருந்தால்தான் புரட்சி தோன்றும். அகவியல் நிலைமை என்ருல் புரட்சியை சாதிக்க வேண்டிய வர்க்கத்தின் வர்க்க உணர்வும், ஸ்தாபன பலமும், மக்களிடம் அந்த வர்க்கத்தின் செல்வாக்கும், அந்த வர்க்கத்திற்கு அரசியல் வழி காட்டக்கூடிய கட்சியின் தகுதியும் ஆகும். புரட்சி கரமான கொள்கையினல் வழிகாட்டப்பட்டு, முற் போக்கு வர்க்கங்கள் பிற்போக்கான அரசியல் அமைப்பை உடைத்தெறிந்துவிட்டு தமது வர்க்க அரசியல் அதிகாரத்தால் பழைய உற்பத்தி உறவு களே அகற்றிவிட்டு புதிய உற்பத்தி உறவுகளே ஏற் படுத்துகின்றன. பழைய சமுதாய அமைப்பு அடைய முடியாத உழைப்பு உற்பத்தித் திறனை புதிய சமு தாயம் அடைய வேண்டும். எனவே புதிய சமுதாய அமைப்பு உற்பத்திச் சக்திகளை வளர்க்கக் கூடியதாக இருக்கும். சமுத்ாயப் புரட்சி வர்க்கச் சமூகங்கள் விள்ர்ச்சி அன்ட்வதற்கு இன்றியாமையாத நியதி 69