பக்கம்:மார்க்சீய சமூக இயல் கொள்கை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரத்தை பயன்படுத்துகின்றனர். போர்ச்சுகலில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பையும், கி ரீ வில் ராணுவ சர்வாதிகார ஆட்சியை பூர்ஷாவா ஜன நாயக வாதிகள் கவிழ்த்த செயலையும் மேற்கூறிய கருத்துக்கு உதாரணங்களாகக் கூறலாம். ஒவ்வொரு சமுதாயப் புரட்சியின் தன்மையும் அது எத்தகைய சமுதாய அமைப்பை ஒழிக்கிறது, எத்தகைய சமு தாய அமைப்பை உருவாக்குகிறது என்பதைப் பொறுத்திருக்கிறது. எனவே வரலாற்றில் நிகழ்ந் துள்ள சமுதாயப் புரட்சிகள் அனைத்தின் தன்மை களைப் பற்றி சுருக்கமாகக் காண்போம். முதன் முதலில் பண்டைய சமுதாயத்திலிருந்து வர்க்க சமுதாயம் தோன்றுதல் மனித வரலாற்றில் முதன் முதலில் தோன்றிய சமுதாயம் புராதன பொதுவுடைமை உறவுச் சமு தாயம் ஆகும். இதனுள் உற்பத் தி ச் சக்திகள் வளர்ச்சி பெற்றபோது வர்க்க சமுதாயம் தோன்றி யது. இனக்குழு சமுதாயத்தினுள் அடிமை முறை வளர்ந்து அது அடிமை உடைமைச் சமுதாயமாக மாறியது. பாபிலோனியா, கிரீஸ், எகிப்து, ரோம் முத்லிய நாடுகளில் இச்சமுதாயங்கள் நிலைபெற்று இருந்ததற்கு தெளிவான சான்று க ள் உள்ளன. அடிமைகள், அ டி ைமச் சொந்தக்காரர்களையும் எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தியுள்ளனர். ஆனல் அவை தனிமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப் பட்டன. பல நூற்ருண்டுகளுக்குப் பின் சுதந்திர மான விவசாயிகளின் நிலைம்ையும், அடிமைகளின் நிலைமையும் பொருளாதார நிலையில் சமமாகி விட் டது. அடிமை வர்க்கமும் விவசாய வர்க்கமும் அடிமைச் சமுதாய நெருக்கடிக் காலத்தில் ஒன்று சேர்ந்து போராடத் தொடங்கின. அடிமைச் சமு. தாயம் வீழ்ச்சியடைந்து நிலப்பிரபுத்துவ சமுதாய