பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மாலை பூண்ட மலர்

தன் அருட்புனலால் துடைத்தாள் (27). இப்படி ஆண்டு கொண்ட மகாமாதா, 'எனக்கும் உனக்கும் ஒரு தொடர்பும் இல்லை; நான் உன்னை ஆளாகக் கொள்ளவில்லை' என்று சொல்லிவிட்டால் என்செய்வது? நான் அடிமை அல்ல என்று சொன்ன சுந்தரர் கதைக்கு இது எதிராக இருக் கிறது அல்லவா? அங்கே அடிமை ஆட்கொண்டவனே மறுக்கிரு.ர். இங்கே ஆண்டு கொண்டவள் அடிமையை மறுக்கிருள்.

அன்னை மறுக்கவில்லை. ஒருகால் அப்படி மறுத்து விட்ட்ால்?’ என்ற விசித்திரமான எண்ணம் தோன்றியது இந்த அன்பருக்கு அப்படிச் சொன்னல் விட்டு விடுகிற பேர்வழி நான் அல்ல என்ற சமாதானம் உடனே உண்டா யிற்று. அம்பிகையைப் பார்த்தே சொல்லத் தொடங்கினர்

"தாய்ே, நீ நெடுங்காலத்துக்கு முன்பே அடியேன் போன போக்கை மாற்றித் தடுத்து ஆண்டுகொண்டாய். அப்படி ஆட்கொள்ளவில்லை யென்று நீ சொன்னுல் அது உனக்கு நல்லதா? நியாயமா?’

அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய்;

கொண்டது அல்ல என்கை நன்றே உனக்கு?

'நியாயமோ, நியாயம் அல்லவோ அதைப்பற்றி <4!JrTuf' நாம் யார்?' என்ற எண்ண்ம் அடுத்துத் தோன்றியது.

அம்பிகை ஒருகால் அவரைச் சோதனை செய்வதற் காகச் சொன்னலும் சொல்லலாம். குழந்தையின் தாய். வேடிக்கையாக, நீ என் சொந்தக் குழந்தை அல்ல. உன்னைத் தவிட்டுக்கு வாங்கி வந்தேன்' என்று சொல்வ தும், அது கேட்டுக் குழந்தை சிணுங்குவதும் வழக்கம். அது போல அம்பிகை சொன்னலும் சொல்லலாம். அதற்காக அன்னையோடு வாதாட முடியுமா? :