பக்கம்:மாவிளக்கு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால யந்திரம் 129

பின் கினைவுக்கு வந்ததை எழுதி வைத்திருக்கிருர்கள் சில வற்றில். சில யாராலேயோ எழுதப் பட்டவை. அவைகளில் உண்மையைக் கண்டு பிடிப்பது சுலபமல்ல. ஆனால், பொறுமையோடு அவற்றை ஆராய்ந்தால் உலகின் நன்மைக்கு வேண்டிய நல்ல பலன் கிடைக்கும் , அரிய உண்மைகள் இடையிடையே மறைந்து கிடக் கின்றன ” என்ருன்.

' என்ன உண்மையோ ?”

" காயகற்பம் செய்து பல நூறு வருஷங்கள் வாழ லாம் ; நினைத்த இடத்திற்கு கினைத்த மாத்திரத்தில் போகலாம்-’ -

சரி சரி ; முதலில் நீ உனது ஆராய்ச்சியை முடி. பிறகு அட்டமாசித்தியைப் பற்றி யோசிக்கலாம்.”

" நான் எனது ஆராய்ச்சிக்கு உதவியாகத்தான் இவற்றையெல்லாம் தேடிக் கொண்டிருக்கிறேன். காரணமில்லாமல் வெவ்வேறு துறையில் இறங்க எனக்கென்ன பயித்தியமா பிடித்திருக்கிறது ?

நான் ஒருவன்தான் அப்படிச் சொல்லாம விருப்பது-பாக்கி.

22.4.4. பல நாட்களாகக் கும்ரேசனேக் காணுேம். கண்பர்களிடம் விசாரித்தேன். ' அவன்தான் சந்நியாசி யாகி விட்டானே, உனக்குத் தெரியாதா?’ என்ருர்கள். திர விசாரித்ததில் அவன் பொதிய மலைச் சாரலில்

தவஞ்செய்து கொண்டிருக்கும் சித்தர்களேத் தேடிப் போயிருப்பதாகத் தெரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாவிளக்கு.pdf/131&oldid=616253" இலிருந்து மீள்விக்கப்பட்டது